24 special

தேர்தலில் வெற்றி பெற பாஜக எடுத்த அதிரடி முடிவு....!பீதியில் எதிர்க்கட்சிகள்...!

Pm modi,ragul gandhi
Pm modi,ragul gandhi

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்த கூட்ட தொடரில் மத்திய அரசின் முக்கிய முடிவுகளான பொது சிவில் சட்டம், மணிப்பூர் வன்முறை மற்றும் தில்லி நிர்வாகப் பணிகள் தொடர்பான அவசர சட்டங்கள் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் காரணமாகவே இந்த கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள்  நடைபெற அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என பிரகலாத் ஜோஷி வேண்டுகோள் விடுத்தார்.


ஆளும்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் விரைவில் நேருக்கு நேர் தேர்தல் களத்தில் சந்திக்க இருக்கும் நிலையில் இந்த கூட்டத்தில் விவாதங்கள் அனல் பறக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. மேலும் பா.ஜ.கவை எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்க்க முடிவு செய்து உள்ளதால் இந்தக் கூட்டத் தொடரிலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பல்வேறு விவாதங்களை எழுப்புவார்கள் என்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. ஆனால் மோடியின் மாஸ்டர் பிளான்  எதிர்க்கட்சினருக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

குறிப்பாக மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே வன்முறை நீடித்து வரும் நிலையில் 100க்கும் மேற்பட்டோர் பலியான செய்தி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சிகள் விவாதம் எழுப்பும் என நிச்சயமாக கூறுகின்றனர். மேலும் பிரதமர் மோடி “நாட்டின் அனைத்து சமூகங்களுக்குமான பொது சிவில் சட்டம் அவசியம்' என்ற கருத்தை முன் வைத்ததும் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அமளியை ஏற்படுத்தும்.  இந்த திட்டம் அறிவித்த உடனே பல விமர்சனங்கள் எதிர்க்கட்சி தலைவர்களிடையே எழுந்தது, முக்கியமாக எதிர்க்கட்சி தலைவர்களால் இந்த திட்டம் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் வருகின்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இதற்கான விவாதங்களும் சூடுபிடிக்க வாய்ப்புள்ளது  .         

இதனை அடுத்து பிரகலாத் ஜோசி, மழைக்கால கூட்டத்தொடர் குறித்த 17 அமர்வுகளை தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். அதில் முக்கிய அம்சங்களாக, தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவும் மசோதா, பல் மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்ட திருத்த மசோதா, வன பாதுகாப்பு திருத்த மசோதா மற்றும் தில்லி அரசின் நிர்வாகப் பணிகள் தொடர்பான மத்திய அரசின் அவசரச் சட்ட மசோதாவும் கொண்டுவர வாய்ப்புள்ளதாக அரசியல் தலைவர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

மத்திய அரசுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே பதவிக்காலம் மீதம் இருக்கும் நிலையில் அமைச்சரவையில் சில மாற்றங்களையும் மேலும் பா.ஜ.கவின் அமைப்புகளில் சில மாற்றங்களையும் ஏற்படுத்த, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே .பி .நட்டா பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பி. எல் சந்தோஷ் ஆகியோர் சில நாட்களாக ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மேலும் இது எதிர்க்கட்சி தலைவர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி ஜூலை மூன்றாம் தேதி பாஜக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், அமைச்சரவையிலும் கட்சியின் அமைப்பு ரீதியிலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற செய்தி வெளியாகி உள்ளது. அமைப்பில் பெரும் மாற்றத்தை செய்து இளைய தலைமுறையினரை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. குறிப்பாக வேட்பாளர்களாக அதிகம் இளைஞர்களை நிறுத்தவும் பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. எதிர்க்கட்சிகள் மத்தியில் நிச்சயம் அதிகம் வாரிசுகளைத்தான் வேட்பாளர்களாக அறிவிப்பார்கள் ஆனால் பாஜக தரப்பில் இளைஞர்களை அதிகம் வேட்பாளர்களாக அறிவிப்பதன் மூலம் நிச்சயம் அது பாஜகவிற்கு சாதகமாக முடியும் எனவும் டெல்லி மேலிடம் திட்டமிட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன!