24 special

எது சின்னம் கூட இருக்காதா....!மொத்தமும் போச்சே...!

Sarath pawar,
Sarath pawar,

மகாராஷ்டிராவில் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர் சரத் பவார், 1999 இல் இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து பிரிந்து சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்பதை உருவாக்கி அதன் தலைவராக தற்போது இருந்து வருகிறார் மகாராஷ்டிராவில் தற்போது பலத்த அதிகாரத்தை பெற்று எதிர்க்கட்சி கூட்டணியாக இருந்து வருகிறார். இவருக்கும் மகாராஷ்டிராவில் தற்போது ஆளும் அரசாக உள்ள பாஜக கூட்டணி அரசுக்கும் என்றுமே சரிபட்டுவராது. தொடர்ச்சியாக பாஜகவை எதிர்த்து அரசியல் வந்தவர் சரத் பவார், தற்போது பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தக்கூடாது என்பதற்காக பாட்னாவில் நடைபெற்ற தேசிய எதிர்க்கட்சிகள் கூட்டணி மாநாட்டிலும் கலந்து கொண்டார்.


13 எதிர்கட்சிகளை கூட்டி நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் எந்த ஒரு நிலையான முடிவையும் எடுக்கவில்லை என்று தகவல் வெளியானது! இருப்பினும் இதன் இரண்டாவது கூட்டத்தை பெங்களூருவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் மாபெரும் திடுக்கிடும் அரசியல் திருப்பம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 

அதாவது சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டு பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் சரத் பவாருக்கு எதிராக திரும்பி உள்ளனர், இந்திய தேசியவாத காங்கிரஸில் இருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் உருவாக்கிய சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். தற்போது இவரே தனது தலைமையில் தனக்கு ஆதரவு தெரிவித்த 30 எம்எல்ஏக்களுடன் பாஜக சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து சரத் பவாருக்கு எதிராக திரும்பி உள்ளதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவார் மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்களில் 9 பேரை அமைச்சராகவும் பதவியேற்கும் விழாவும் நடைபெற்றுள்ளது. இந்த விழாவிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 40 எம் எல் ஏக்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

இதன் பின்னணியில் இப்படி ஒரு அரசியல் பிளவு ஏற்பட்டதற்கு காரணம் சரத் பவார் தனது மகளுக்கு கட்சியின் செயலாளர் பதவியை கொடுத்தது அஜித் பவாருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. முன்னதாக அஜித் பவார் பாஜகவுடன் அடிக்கடி ஆலோசனை மேற்கொண்டதாகவும் ரகசியமான நெருக்கம் காட்டி வந்தார் என சரத்பவார் தரப்பில் தற்போது கூறப்படுகிறது. அஜித்பவாரும் அவ்வப்போது பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார். இப்படி இருந்த சூழலில் தான் திடீரென்று அஜித் பவார்  தன்னுடன் இருக்கும் ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைவதாக அறிவித்தது சரத் பவாருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

மகாராஷ்டிராவில் நடந்துள்ள இந்த அரசியல் பிளவு மற்ற மாநில அரசியலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது  அஜித் பவார் தலைமையில் பெரும்பான்மையான ஆதரவாளர்கள் பாஜகவுடன் இணைந்துள்ளதால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னமும் கட்சியும் தங்களுக்கு உரியது, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை நாங்களே பயன்படுத்துவோம் இதற்கு ஏதேனும் எதிர்ப்பு வந்தால் போராட தயாராக உள்ளோம் என்று துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார் அறிவித்துள்ளார்.

இதைப் பற்றி சரத் பவாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது 'இது போன்ற விஷயங்கள் எனக்கு ஒன்றும் புதிது கிடையாது 1980 இல் 58 எம்எல்ஏக்கள் என் கட்சிகள் இருந்தனர் பிறகு அனைவரும் பிரிந்து சென்றனர் வெறும் ஆறு எம்எல்ஏக்களை மட்டுமே வைத்து நான் கட்சியை வலுப்படுத்தியுள்ளேன் என்று கூறியுள்ளார் சரத் பவார், இருந்தாலும் கட்சியின் பெயர் மற்றும் சின்னமாவது தமக்கு வேண்டும் என்று சரத்பவார் கெஞ்சும் நிலைமையே தற்போது நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.