24 special

செஞ்சி மஸ்தானுக்கு அண்ணாமலை வெச்ச ஆப்பு.. இனி உத்தரமேரூர் பக்கம் வந்திராந்திங்க...

senjimasthan, annamalai
senjimasthan, annamalai

அண்ணாமலையை சுற்றி குற்றவாளிகள் தான் இருக்கிறார்கள் என்றும்,  அவருக்கு வைக்கப்படும் பாதாகைகளிலிருநது வரவேற்பவர்கள் வரை காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளிகள் தான் எனவும் , அண்ணாமலை  அநாவசியமாக பேசுவதை  நிறுத்தி கொள்ளவேண்டும என திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் என குற்றம் சாட்டினார்.  இந்நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 92 நாட்களாக என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் 195 தொகுதிகளில் நடைபயணம் செய்த அண்ணாமலை தற்போது 196 தொகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி அலுலவகம் அருகே அண்ணாமலை தனது என் மண் என் மக்கள் நடைபயணத்தை தொடங்கினார். அண்ணாமலை இந்த நடைபயணத்தில் பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர், நிர்வாகிகள், பாஜக தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இதனையடுது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை  சிறிய வளர்ச்சி பெற்ற கிராமமாக  உள்ள உத்திரமேரூரில் பல்வேறு சிறப்புகள் அடங்கியுள்ளதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் அண்ணாமலை மீது வைத்த விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை,அமைச்சர் செஞ்சி மஸ்தான் தன் மீது வைத்த விமர்சனங்கள் தனக்கு வியப்பாக உள்ளதாகவவும் உத்திரமேரூரில் உள்ள கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ள தேர்தல் விதிமுறைகளை நேரில்  வந்து பார்த்தாலே போதும் அவர் அமைச்சர் பதிவியில் நீட்டிக்கமாட்டார் என தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் என்னவெல்லாம் தவறாக இருக்கிறதோ அதேபோன்று மஸ்தானிடம் தவறாக உள்ளதாக தெரிவித்தார். குடூம்ப ஆட்சி அவரின் மொத்த குடும்பமும் உள்ளாட்சி பிரதிநிதிகளாக உள்ளனர். அடுத்த முறை உத்திர மேரூர் வந்தால் தன்னை பேசுவதற்கு முன் இங்கிருக்கும் தேர்தல் விதிமுறை கல்வெட்டுகளை பார்த்த பின் தன் மீது விமர்சனங்களை முன்வைக்கட்டும் என தெரிவித்தார். இதில் இருக்கும் ஒரு வார்த்தைக்கும் பொருத்தமில்லாத ஒரு அமைச்சராக இருக்கிறார் என்றால் அது செஞ்சி மஸ்தான் தான் எனவும் இனி எப்போதும் அவரால் அமைச்சராக முடியாது என்றும் அண்ணாமலை விமர்சனம் செய்தார்.