மலையாள தெலுங்கு இணையருக்கு பிறந்த சமந்தா சென்னையிலேயே முழுவதுமாக வளர்ந்தார். மேலும் இவருக்கு யசோதா என்ற பெயரும் டி நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ பள்ளியில் தனது பள்ளி படிப்பையும் ஸ்டெல்லா மேரிஸில் கல்லூரி படிப்பை முடித்த இவர் கல்லூரி படிக்கும் போது நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றியுள்ளார். இவர் 2007ஆம் ஆண்டு ரவிவர்மன் உடைய மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக இவன் நடித்திருந்தாலும் தெலுங்கு திரைப்படமான ஏ மாயா சேசவா என்ற படமே முதலில் வெளிவந்தது இந்த படம் பெரும் வெற்றியைப் பெற்ற பிறகு இப்படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்திற்காக சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விரதியும் பெற்றோர் அதற்குப் பிறகு பிருந்தாவனம், தூக்குடு, சீத்தம்ம வாக்கிட்டிலோ சிரிமல்லி, என தொடர்ச்சியாக தெலுங்கு திரைப்படங்களிலும் பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், 10 எண்றதுக்குள்ள, தங்கமகன், தெறி, 24, கத்தி, என தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் தெலுங்கு இரண்டிலும் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.
பிறகு தெலுங்கில் வெளியான ஏ மாயா சேசவா என்ற திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நாகார்ஜுன மகனான நாகா சைத்தன்யாவை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகளாகவே இருவரும் காதலித்து வந்த நிலையில் கோவாவில் இவர்களின் திருமணம் நடிகை சமந்தாவின் மதத்தான கிறிஸ்தவ மதத்தைப் போன்றும் இந்து மதத்தை போன்றும் இரண்டு முறைப்படி நடைபெற்றது. மேலும் திருமணத்திற்குப் பிறகு சமந்தா ரூட் பிரபு என்ற தனது பெயரை சமந்தா அக்கினேனி என்று மாற்றிக் கொண்டார். இவர்களது திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான பொழுது அதிக லைக்களையும் வைரலாகவும் பகிரப்பட்டது மேலும் வைரல் ஜோடியாக பார்க்கப்பட்ட இருவரும் சேர்ந்து புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டால் போனதும் அன்று முழுவதும் வைரலாகும் அளவிற்கு பிரபலமாக இருந்தனர். திருமணத்திற்கு பிறகு சமந்தா நடிக்க மாட்டாரா என்ற கேள்விகளும் வழக்கம்போல் எந்த ஒரு நடிகையும் திருமணத்திற்கு பிறகு நடக்க மாட்டார்கள் அதேபோன்று சமந்தா நடிக்க மாட்டார் என்ற பேச்சுகளும் சமூக வலைத்தளத்தில் வலம் வந்த பொழுது மெர்சல் திரைப்படத்தில் நடித்து மீண்டும் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.
தொடர்ச்சியாக ரங்கஸ்தலம், மகாநதி, இரும்புத்திரை, சீமா ராஜா, யு டேன், சூப்பர் டீலக்ஸ், மஜிலி, ஓ பேபி, ஜானு என திருமணத்திற்கு பிறகும் பல முக்கிய படங்களில் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையாக மாறினார். ஆனால் திரை வாழ்கையில் தனது வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த சமந்தாவிற்கு திருமண வாழ்க்கை பாதியிலே தடைபட்டது போன்று நாக சைதன்யாவும் சமந்தாவும் 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இவர்களின் விவாகரத்து தகவல் வெளியானது இவர்கள் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் மூழ்கடித்தது. தனது விவாகரத்திற்கு அடுத்தும் தொடர்ச்சியாக நடித்து தற்போது வரை சினிமா துறையின் தனது வெற்றியை தக்க வைத்துக் கொண்டு வருகிறார் சமந்தா, ஆனால் இதற்கிடையில் இவருக்கு மயோசிட்டிஸ் என்ற தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டார் இருப்பினும் அந்த சூழ்நிலையும் தான் எடுத்துக் கொண்ட படம் முழுவதையும் முடித்து கொடுத்த சமந்தா தற்போது உடல் நலம் தேறி வருகிறார். இந்த நிலையில் சமந்தாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் அழுத்தம் காட்டி வருவதாகவும் அதற்காக தன் உறவினர்களில் ஒரு மாப்பிள்ளையை பார்த்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது அதுமட்டுமின்றி சமந்தா இதுவரை முரட்டு சிங்கிளாக இருந்து வந்த ஒரு வாரிசு நடிகருடன் நெருக்கம் காட்டி வருவதாகவும் சமந்தா இவ்விருவர்களில் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் அதற்கு நாங்கள் தடையாக இருக்க போவதில்லை எங்கள் பெண்ணின் திருமண மட்டுமே எங்களுக்கு முக்கியம் என இவரது பெற்றோரும் சமந்தாவின் விருப்பத்திற்கு பச்சை கொடி காட்டியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.