திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தொடர்ந்து வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது எல்லாம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக பைல்ஸ் வெளியிட்ட பின்னே இந்த சோதனை தீவிரமடைந்தது. அண்ணாமலை, திமுகவின் முக்கிய புள்ளிகள் குறித்து பேச்சை எடுத்தாலே அடுத்த நாளே திமுக கூடாரம் கதி கலங்கி நிற்பார்கள். இப்போது அமைச்சர்கள் குறித்து 2024ல் நடக்கப்போகும் மாற்றத்தை சொன்னதால் அமைச்சர்கள் பீதி அடைந்து விட்டார்களாம்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை வந்த பின் அவர் சொல்வது எல்லாம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. அதுவும் திமுக ஊழல் பைல்ஸ் வெளியிட்ட பின் அமைசர் பொன்முடி தொடர்பான இடத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருக்கு நவம்பர் 30ம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. மேலும் மணல் குவாரிகளில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார்கள் என சொன்னதும் சுமார் எட்டு மாவட்டங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை தொடங்கி ஊழலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக ஐஏஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பினர். இதில் முக்கிய அமைச்சர் சிக்குவார் என்றும் தகவல் கசிந்தன.
ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஜாமின் கிடைக்காமல் சிறையில் இருந்து வருகிறார். இப்படி அண்ணாமலை திமுகவில் உள்ள அமைச்சர்கள் பெயரை சொன்னாலே அவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அண்ணாமலை மேற்கொண்டு வரும் நடைப்பயணத்தில் பெரம்பலூரில் அமைச்சர் கே.கே எஸ் சிவசங்கர் போக்குவரத்துக்கு துறையில் தகுதியற்ற போலி நிறுவனங்கள் மூலம் 1276 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார்.வேக கட்டுப்பாட்டு கருவி, மாசுக்கட்டுப்பாடு சோதனை இயந்திரம் வாங்கியது மூலம் 783 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார் என்றும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். இதன் மூலம் அமைச்சர் சிவசங்கர் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இப்போது ஆவின் பால் துறையை கையில் எடுத்துள்ளார் இப்படி அண்ணாமலை மக்களுக்காக நன்மை செய்யாமல் இருக்கும் அமைச்சர்களின் துறையை கையில் எடுப்பதால் அந்தச் துறை அமைச்சர்கள் மீது நடவடிக்கை பாய்ந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தாடு தொகுதியில் நேற்று, 'என் மண், என் மக்கள்' நடைபயணம் மேற்கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது; நம் கோபம் எல்லாம் தி.மு.க., ஆட்சியாளர்கள் மீதும், அந்த குடும்பத்தின் மீதும் தான். ஒரே குடும்பம் தமிழகத்தின் சொத்தை சூறையாடுவது தான் கோபம். பொய்யான ஆட்சியை செய்து கொண்டு, திராவிட மாடல் என்பது தான் கோபம். தி.மு.க., ஆட்சியாளர்களும், காங்கிரஸ் தலைவர்களும் கூட்டு கொள்ளையாக, தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக, டெல்டா பகுதி உரிமைகளை விட்டு கொடுப்பதற்காக, காவிரி விவகாரத்தில் நாடகம் நடத்தி வருகின்றனர். டெல்டாக்காரர் என்று சொல்வதற்கு, டெல்டாவில் பிறந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. டெல்டா விவசாயிகளுக்கு, யார் துணை இருக்கிறாரோ அவர் தான் டெல்டாக்காரர். உண்மையான டெல்டாக்காரர், பிரதமர் மோடி தான்.
முதல்வர் ஸ்டாலின் சங்கல்பத்துடன் இருக்கிறார். ஒரு நாளுக்கு 10 பொய்களை சொல்லி வருகிறார். தி.மு.க., 11 அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் உள்ளது. சனாதனத்தை நம்பாத அமைச்சர்கள் எல்லாம், எப்போது ஜெயிலுக்கு போவோம் எனத் தெரியாமல், கோவில் கோவிலாக போகின்றனர். தமிழகத்தில் உள்ள 35 அமைச்சர்களில், 2024 லோக்சபா தேர்தலுக்கு பின், எத்தனை பேர் அமைச்சர்களாக இருப்பர் என தெரியாது. விடியல் ஆட்சி என்று சொல்லி, மக்களிடம் கொள்ளை அடிப்பதற்காக ஆட்சி நடத்துகின்றனர்' என்று தெரிவித்தார்.
2024 தேர்தலுக்கு பின் அமைச்சர்கள் பலர் சிக்கலாம் என்றும் பலர் திமுக கட்சியை விட்டு பாஜக பக்கம் கைகோர்ப்பார்கள் என்று பேச்சு எழுந்துள்ளது. அண்ணாமலை நேற்று இப்படி பேசியதால் திமுக அமைச்சர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கலக்கத்தில் இருப்பதாக வேறு தகவல் வந்துள்ளன. தொடர்ந்து திமுக அமைச்சர்கள் மீது சோதனை மற்றும் சம்மன் அனுப்பிய படியும் அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.