தமிழகத்தில் ஆவின் பால் பாக்கெட்டில் பச்சை நிற பால் பாக்கெட் அதிகம் மக்கள் பயன்படுத்தும் பால் பாக்கெட்டாக விற்பனையாகி வந்தது. இந்த துறையில் புது மாற்றங்களை கொண்டு வர முதலமைச்சர் எண்ணி அமைச்சர் நாசரை மாற்றி மனோ தங்க ராஜ் பால்வளத்துறை அமைச்சராக நியமித்தார். இப்போது அந்த துறையை மொத்தமாக்க மாற்றி விட்டார் மனோ தங்கராஜ் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. பச்சை நிற பால்பாக்கெட் விற்பனையை கடந்த 25ம் தேதியுடன் நிறுத்துவதாக ஆவின் அறிவித்தது. இதற்கு பதிலாக, பச்சை நில பாக்கெட் பாலைவிட 1 சதவீத கொழுப்புச் சத்து குறைவான ஊதா நிற பாக்கெட் விற்பனையை அதிகரிக்கப் போவதாக ஆவின் அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் (4.5% கொழுப்பு சத்து உள்ள நிலைப்படுத்தப்பட்ட பால்) விநியோகத்தை 25-ம் தேதி முதல் நிறுத்த ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மொத்த பால் விற்பனையில் ஆவின் பச்சை நிற பாக்கெட் விற்பனை 40 சதவீதம் ஆகும். 40 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டாகவும் இது உள்ளது. அதேநேரம், அதிக கொழுப்பு சத்து கொண்ட பால் தயாரிக்க, வெளி மாநிலங்களில் இருந்து வெண்ணெய், பால் பவுடர் ஆகியவற்றை ஆவின் அதிக விலைக்கு வாங்கி, குறைந்த விலையில் பச்சை நிற பால் பாக்கெட்டை விநியோகம் செய்வதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று அரசு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டது. இதற்கு சமூக தளத்தில் பலரும் அரசு ஆவின் பச்சை நிற பாக்கெட்டை நிறுத்தி விட்டு, அரசு நடத்தும் தனியார் நிறுவதில் பச்சை நிற பாக்கெட்டை வாங்க முனைப்பு காட்டுவதாக கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், ஆவின் பால் பாக்கெட்களில் கொழுப்பின் அளவு குறைவாக உள்ளதாக ஆய்வக பரிசோதனை அறிக்கை ஒன்றையும் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், அந்த அறிக்கையில், “உண்மை தன்மை இல்லை என்றும், வடமாநிலங்களில் உள்ள நிறுவனங்களை தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு, அவர்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்துக்கு எதிராக பேசுகின்றனர்” எனவும் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் அண்ணாமலை கையில் எடுத்த துறை ஏதும் சாதாரணமாக சென்றதில்லை இல்லை என்பது போல் இந்த அவ்வைந் விவகாரத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் விவகாரம் பேசப்பட்டது. இந்த துறை தொடர்பாக விரைவில் நடவடிக்கை பாயும் என விமர்சனம் எழுந்தது. இதனால் ஆவின் விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் இடையே வார்த்தை போர் மோதல் வலுத்தது. இந்நிலையில் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தத்திற்கான காரணத்தை அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்,
சமீபத்தில் அவர் பேட்டியளித்த தனியார் யூ டியூப் சேனலுக்கு கூறுகையில், " அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனம் வெளி மாநிலத்தில் இருந்து வெண்ணை வாங்கி தான் பாலை விநியோகம் செய்தார்களா?..திமுகஆட்சிக்கு வந்த பிறகு ஆவினில் 12 லட்சம் லிட்டர் பால் shortage ஆகியுள்ளது!. அதன் காரணமாகவே வெளி மாநிலத்தில் இருந்து பால் பவுடர் வெண்ணை போன்றவற்றை கலப்படம் செய்கிறார்கள்! அந்த shortageஐ சரிபண்ணமால் கையால் பண்ண தெரியாமலே பால் கொள்முதல் குறைந்து விட்டது! இதனால் மக்களுக்கு உரிய பாலை கொடுக்க முடியாமல் போனது. இந்த தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் அதில் கொழுப்பு அதிகமாக இருக்கு உடல் நலத்திற்கு கேடு! அதனால் 1 சதவீதம் கொழுப்பு குறைவாக உள்ள பாலை விற்பதாக ஆணவ பேச்சை பேசி வருகிறார்கள்". என்று ஆவினில் நடந்துள்ள முறைகேடை விமர்சனம் செய்துள்ளார்.