24 special

திமுகவின் முக்கிய நபர் இன்று அமலாக்க துறை செல்கிறார்....

enforcement department,DMK
enforcement department,DMK

 திமுகவின் தற்போது இருக்கக்கூடிய மூத்த தலைவர் அமைச்சர்  துரைமுருகன், அண்ணாதுரை காலத்தில் இருந்தே திமுகவில் இருந்து வரும் இவர் முதல்வர் ஸ்டாலினை விட மிகவும் சீனியர். கருணாநிதி உடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர், இவரது மகனான கதிர் ஆனந்த் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆக இருக்கிறார். 


திமுகவின் பொது செயலாளர், திமுகவின் முக்கியத்துவம் என்று அழைக்கப்படும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் இன்று அமலாக்கத்துறை வசம் ஆஜராகிறார். இதன் பின்னணியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்துக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த ரெய்டில் கணக்கில் வராத 10 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது, மேலும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 11.55 கோடி ரூபாய் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டது. 

அப்பொழுது அந்த தொகுதியில் தேர்தலும் சில நாட்கள் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதா இந்த கோணத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இறங்கியது. விசாரணைக்கு அமலாக்கத்துறை இறங்கி விசாரணை மேற்கொண்டு வருவதில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கதிர் ஆனந்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. 

இந்த நிலையில் அமலாக்க துறையின் சம்மனுக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க கதிர் ஆனந்த் இன்று நேரில் செல்கிறார், ஏற்கனவே துரைமுருகன் துறையைச் சேர்ந்த நீர்வளத் துறையில் நான்காயிரம் கோடி ரூபாய்க்கு மணல் அள்ளப்பட்டிருக்கிறது, சட்டவிரோதமாக மணல் கொள்ளை அடிக்கப்பட்டு ஏகப்பட்ட அரசுக்கு வர வேண்டிய வருவாய் அனைத்தும் வராமல் தடுக்கப்பட்டிருக்கிறது எனக்கூறி வந்த நிலையில் துரைமுருகனின் மகன் எம்பி கதிர் ஆனந்த் இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஒருபுறம் அமலாக்கத்துறை பொதுச்செயலாளர் துரைமுருகனை நான்காயிரம் கோடி மணல் வழக்கில் கிட்டத்தட்ட நெருங்கிய வேளையில், இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் சென்றிருப்பது துரைமுருகன் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

ஏற்கனவே திமுகவின் துணைக் கொள்கை பரப்புச் செயலாளர் குடியாத்தம் குமரன் 60,000 கோடி ரூபாய் அளவிற்கு திமுகவில் பொதுச்செயலாளர் துரைமுருகன் மணல் கொள்ளை அடித்து சொத்து குவித்து வைத்துள்ளார் எனக்கூறியதும் தற்பொழுது அமலாக்கத்துறை வசம் துரைமுருகனும் அவரது மகன் கதிர் ஆனந்தம் சிக்கி இருப்பதும் பல்வேறு அரசியல் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அமலாக்கத்துறை மணல் கொள்ளை விவகாரத்தில் அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையில் சில அதிகாரிகள் அப்ரூவர்கள் ஆகிவிட்டனர் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது, மணல் கொள்ளையை அனுமதித்ததன் மூலம் தவறு செய்து விட்டோம் மாவட்ட நிர்வாகமும் இதற்கு காரணம் எங்களுக்கு தெரியாது எங்களை விட்டு விடுங்கள் என்கின்ற ரீதியில் அமலாக்கத்துறை வசம் அதிகாரிகள் அனைத்து உண்மையையும் கொட்டி தீர்த்து விட்டனர் எனவும் தகவல்கள் கிடைத்த நிலையில் அதிகாரிகள் ஆவணத்தை மிகவும் ஸ்ட்ராங்காக ரெடி செய்து வருகின்றனர். 

ஏற்கனவே அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் மீது 3000 பக்க குற்ற பத்திரிகையை தாக்கல் செய்தது தான் செந்தில் பாலாஜி ஐந்து மாதங்களைக் கடந்தும் இன்றும் சிறையில் இருந்து வெளியில் வர முடியாமல் இருக்கிறார், இந்த நிலையில் பலத்த ஆவணங்களை ரெடி செய்வதன் மூலம் மணல் கொள்ளையில் யார் சிக்குவார்கள்? எத்தனை பேர் உள்ளே செல்வார்கள் என்று தெரியாத நிலை திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.