தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேச்சு நாடு முழுவதும் வைரலாகிறது என்றால் நம்புவீர்களா? ஆம் அதுதான் உண்மை அண்ணாமலை சுட்டி காட்டிய ஆப்ரகாம் மதங்களின் எண்ணங்களும், உலக பெரும் பணக்காரர் எளான் மஸ்க் என்ன செய்தார் என குறிப்பிட்டதும்.
புத்தகங்களின் தலைப்பை மேற்கோள்கட்டி இந்தியாவின் கலாச்சாரம் என்ன என்பது குறித்து சரியான எடுத்து காட்டுக்களை தேர்வு செய்து அனைத்து மக்களுக்கும் புரியும் வகையில் பேசியுள்ளார் அண்ணாமலை, உண்மையில் அரசியல்வாதியாக அண்ணாமலை, அமைச்சர்கள் முதல்வர் செயல்பாடுகளை விமர்சனம் செய்வது என அரசியல் ரீதியாக அண்ணாமலை பேசிய பேச்சுக்கள் வைரலாகி இருக்கின்றன.
தற்போது கலாச்சாரம் குறித்தும் ஆபிரகாம் மதங்கள் என்ன நினைக்கின்றன என்பது குறித்தும் அக்குவேறு ஆணிவேராக அண்ணாமலை பேசியிருப்பது தமிழகத்தை தாண்டி அவர் பணியாற்றிய கர்நாடக மாநிலத்திலும் நாட்டின் பல்வேறு மக்களிடமும் வைரலாகி வருகிறது.
பலரும் அண்ணாமலை கர்நாடக சிங்கம் அல்ல உண்மையில் ஒட்டுமொத்த நாட்டிற்கும் சிங்கம் குறிப்பாக இந்திய கலாச்சாரம் குறித்தும் அதில் தொடுக்கப்படும் வெளிநாட்டு மதங்களின் வியூகம் குறித்தும் இவ்வளவு அருமையாக கருத்தினை பதிவு செய்வார் என எதிர்பார்க்கவில்லை என வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
இனி 2026 ம் ஆண்டில் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்திக்க வேண்டியது பாஜகவின் தேர்தல் அஜென்டாவாக இருந்தல் வேண்டும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு :-