Tamilnadu

"நாடார் " வியாபாரிகள் குறித்து தவறான பேச்சு பெண்மணியை கைது செய்ய வேண்டும் ராமா ரவிக்குமார்

Ramaravikumar
Ramaravikumar

பெண்மணி ஒருவர் வீடியோ ஒன்றில் பல்வேறு சம்பவங்கள் குறித்து தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார் அதில் நாடார் கடையில் சில்லறையை கொடுக்கும் போது கையை தொட்டு கொடுக்கிறார்கள் என குறிப்பிட்ட சமுதாயம் குறித்து பேசியது கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.


இது குறித்து இந்து தமிழர் கட்சியின் நிறுவனர் இராம இரவிக்குமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார் அது பின்வருமாறு :-

காணொளியில் காணப்படும்  பெண் குழந்தைகள் பாலியல் துன்பங்களுக்கு ஆளாவது குறித்து பேசுகிறார்நாடார் கடைகளில் பணத்தை கொடுக்கும் போது எப்படி தொட்டு கொடுக்கிறான் என்று பேசுகிறார்.  அனைத்து மத சாதியினரும் வியாபார கடை வைத்திருக்கும் போது குறிப்பிட்ட "நாடார் "சமுதாய வியாபாரிகளை மட்டும் கொச்சைப் படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கிறிஸ்தவ திருச்சபைகளில் நடக்கக்கூடிய பாலியல் வக்கிரங்கள் குறித்து இந்தப் பெண்மணி பேசியிருந்தால் பாராட்டலாம். அதைவிட்டுவிட்டு, கடின உழைப்புக்கு பெயர் போன "நாடார்" சமுதாய மக்களை இழிவுபடுத்தி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்து தமிழர் கட்சி சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். "வணிகர்களின் காவலர்" என்று சொல்லக்கூடிய ஐயா விக்கிரமராஜா அவர்கள் இதை கண்டித்து அறிக்கை விடுவார் என்று நம்புகிறேன். இல்லை எனில் அவருடைய கிறிஸ்தவ விசுவாசம் தடுக்கிறதோ என்று நினைக்க தோன்றும்.

குமரி மாவட்டத்தில் ஜாதி மத கலவரத்தை தூண்டும் நோக்கத்தில் நாடார் சமுதாயத்தை குறித்து மிகவும் தரக்குறைவாக 21-11-2021 அன்று காலை ஆராதனையில் கிறிஸ்தவ மதத்தில் ஒரு பிரிவான CSI குன்றத்தூர் உயிர்த்தெழுந்த மீட்பர் ஆலயத்தில் செய்தி கொடுத்த திருமதி.பியூலா ராஜப்பா மீது வழக்குப் பதிவு செய்து  சிறையில் அடைக்க வேண்டும் என இராம இரவிக்குமார் வலியுறுத்தி இருக்கிறார். அவர் பகிர்ந்த காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.