பத்து மண்டலங்கள் - மிஷன் 2024 அண்ணாமலை வகுக்கும் வியூகங்கள் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள காரணத்தினால் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது தேர்தல் பணிகளை துவங்க வருகிறார்கள். அந்த வகையில் பாஜக இதன் பணிகளை இந்த வருட தொடக்கத்திலேயே ஆரம்பித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக அதிமுக பாஜகவில் சில சலசலப்புகள் ஏற்பட்டு வந்த காரணத்தினால் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் பற்றிய ஆலோசனைகளை
மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது. அப்போதே பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் 2024 தேர்தலை சந்திக்கும் எனவும் மேலும் 20க்கு 20 என்ற வகையில் தொகுதிகள் பிரிக்கப்படும் என்றும் பல தகவல்கள் வெளிவந்தன. ஏற்கனவே இரண்டு முறை பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் மறுபடியும் பிரதமராக அவரே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற தீவிரத்தில்
பாஜக தனது தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தற்போது கர்நாடக சட்டசபை தேர்தலில் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் தமிழக பாஜகவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?, தமிழக பாஜகவினர் என்னென்ன செய்ய வேண்டும் என்ற திட்டங்களை அடிப்படையாக வைத்து அண்ணாமலை அடுத்ததாக இறங்கி உள்ளதாக கமலாய தரப்பில் கூறப்படுகின்றன
கர்நாடகாவில் இருந்து திரும்பியும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கமலாயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தை முதலில் நடத்தினார்.பிறகு மாநில நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையை மேற்கொண்டார். அதன்படி அமைப்பு ரீதியாக தமிழக பாஜக 66 மாவட்டங்களாகவும் 7-8 மாவட்டங்களுக்கு ஒன்று எனவும் 8 பெருங்கோட்டங்களாகவும் பிரிந்து செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பெருங்கோட்டங்கள் பொறுப்பாளர்களின் கவனிப்பிலும், தலைவர்களின் கவனிப்பில் மாவட்டங்களும் தேர்தல் நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் பாஜக கட்சியை வலுப்படுத்த வேண்டிய நடவடிக்கையில் அண்ணாமலை இறங்கி உள்ளாராம். இதற்கு
முன்பு மாவட்ட மற்றும் பெருங்கோட்ட பொறுப்புகளில் வெளி நபர்கள்நியமித்திருந்ததால் உள்ளூர் கள நிலவரம் பற்றி அவர்களுக்கு தெரியவாய்ப்பில்லை இதனால் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் முழுவீச்சு நடப்பதில்லை ஆதலால் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் மூன்று நான்கு மாவட்டங்களை ஒரு மண்டலமாக பிரித்து ஒவ்வொரு மண்டலங்களுக்கும் ஒவ்வொரு பொறுப்பாளரையும் அப்படி பொறுப்பாளராக நியமிக்கப்படுபவர் மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியை பற்றி நன்கு தெரிந்தவராகவும் அங்கிருக்கும் மக்கள் அனைவராலும் அறிமுகமானவராகவும் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அதிக
அறிமுகங்கள் மற்றும் செல்வாக்கு பெற்ற ஒருவராக இருக்க வேண்டும் என்றும் அப்படிப்பட்ட நபரையே மண்டலத்தின் பொறுப்பாளராக நியமிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பொறுப்பாளர்களுக்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ்,அதிகாரிகள், சினிமா, விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்த விளங்குபவர்களை பாஜக தனது கட்சியில் சேர்க்கும் பணிகளிலும் தீவிரமாக இறங்கி உள்ளதாக கமலாய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் பாஜகவும் 20 தொகுதிகளில் அதிமுகவும் கூட்டணி பங்கீடு இருக்கும் என்று ஏற்கனவே கூறியது போன்று முடிவு செய்யப்பட்டுள்ளதால் அந்த 20 தொகுதிகள் எது எது என குறிக்கப்பட்டு அதில் மற்ற தொகுதிகளில் நடக்கும் பணிகளை விட இந்த 20 தொகுதிகளில் களப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில்
பாஜகவினர் தீவிர களப்பணிகளை ஆற்றி வருகின்றனர். மேலும் இந்த 20தொகுதிகளுக்கும் யார் யார் எம்பி என தற்போது பட்டியலிட டெல்லிமேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.