24 special

திமுக விசிக கூட்டணி ..! தானாக சரண்டர் ஆன திருமா

Mk stalin, thirumavalavan
Mk stalin, thirumavalavan

விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வருகிறார்,ஆனால் திமுகவிற்கு எதிராகவே சில கருத்துக்களை அவ்வப்போது கூறி வந்துள்ளார். பதவி என் தலை முடிக்கு சமம் என பாஜகவை பேசுவது போன்று திமுகவை திருமாவளவன் ஆர்ப்பாட்டத்தில் பேசியதும், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு  வாழ்த்து தெரிவித்ததும்,


மேலும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நான் என்ன திமுக காரனா என்று கோபத்தில் கொந்தளித்தும் என இப்படி  அவ்வப்போது திமுக கூட்டணிக்கு எதிராக திருமாவளவன் தனது செயல்பாட்டின் மூலம் அரசியல் செய்து வந்தார்.இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் மாறிவிடுவார் விலகிவிடுவார் என அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்டு வந்த நிலையில், நான் யாரையும் சந்தித்து கூட்டணி பற்றி பேசவில்லை என திருமாவளவன் ஒப்புதல் வாக்களித்துள்ளார்.

பத்து மாவட்ட செயலாளர்களின் பொறுப்பை பெண்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வழங்கியுள்ளது மேலும் 10 மாவட்ட செயலாளர்கள் உட்பட 110பொறுப்புகளும் பெண்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி சென்னை அசோக் நகரில் உள்ள கட்சி தலைமையகத்தில் மாநிலச் செயலாளர் நற்சோனை உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோரைசந்தித்து நன்றி தெரிவித்தனர். 

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தற்போது நடந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் கர்நாடக மக்கள் பாஜகவை விரட்டி அடித்துள்ளனர். அதே மாதிரி 2024 ஆம் ஆண்டுதமிழகத்தில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த மாநில கட்சிகள் அனைத்தும் காங்கிரசோடு இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்த திருமாவளவன் மேலும் பாஜக தமிழகத்தில் அதிமுகவின் தோலேரிஎவ்வளவு வேகமாக சவாரி செய்தாலும் அவர்களால் ஒரு அங்குலம் கூட முன்னேறமுடியாது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் அதிமுகவிற்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார் பாஜகவோடு சேர்வதால் அதிமுக தேய்மானம் அடைய வாய்ப்பு இருக்கிறது தவிர துளி கூட வலிமை பெற வாய்ப்பு இல்லை, பாஜகவால் அதிமுகவிற்கு பாதிப்பே ஏற்படும் என்பதை உணர்ந்து அதிமுக செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அடுத்ததாக திமுகவின் முன்னாள் முதல்வரான கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியே

நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்றும் இந்தநிகழ்ச்சி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்காக மேற்கொள்ளப்படும் களமாக அமையும் என்றும் நம்புவதாக அவர் கூறினார்.அதோடு விடுதலைகள் சிறுத்தைகள் கட்சி, திமுக கூட்டணியை பலவீனப்படுத்தும் எந்த ஒரு செயலிலும் ஈடுபடாது

மேலும் யாரையும் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கிடையாது தொகுதியை தற்போது மாற்றியிருப்பதால் அதுதான் வேறு விதமான வதந்தியாக பரவுகிறது என்று கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சிதிமுகவின் கூட்டணியில் இருக்கும் என்பதை மற்றொரு முறை உறுதி செய்துள்ளார் திருமாவளவன்.

தற்போது அதிமுக பாஜக கூட்டணி உடையாது என தெரிந்து கொண்ட திருமாவளவன் இனிமேல் ஏற்கனவே இருக்கும் திமுக கூட்டணியை விட்டு செல்வது நல்லதல்ல என்று உணர்ந்த காரணத்தினால் தான்  யாரையும் சந்திக்கவில்லை திமுக கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என என கூறியுள்ளார் திருமாவளவன் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் பொது நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைந்தால் ஆதரவு என சிலரை சந்தித்து பேசினார் திருமாவளவன் என தகவல்கள் பரவி வந்த நிலையில் அது குறித்து திமுகவிற்க விளக்கமளிக்கவே இதுபோல் நான் யாரையும் சந்தித்து பேசவில்லை என திருமாவளவன் திமுகவுடன் சரண்டர் ஆகும் விதமாக பேசியுள்ளார் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.