நான் செக்யூலரிஸ்ட், நாங்கள் எல்லாம் மதங்களை கடந்து வாழ்பவர்கள்,'ஹிந்தி தெரியாது போடா', மதத்தைவிட மனிதம்தான் தான் பெரிது என இப்படி தொடர்ச்சியாக சித்தாந்தம் மற்றும் அரசியல் சார்ந்த கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்ற பெயரில் வலம்வந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தற்பொழுது ஃபர்ஹானா என்ற ஒரு படம் பாடம் கற்றுக் கொடுத்துள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவான 'பர்ஹானா'திரைப்படம் கடந்த மே 12-ம் தேதி திரைக்கு வந்தது. இந்த படம் பலரின்பாராட்டுக்களை பெற்று வருகிறது! ஆனால், இந்தப் படத்தில் ஐஸ்வர்யாராஜேஷின் கேரக்டர் இஸ்லாமியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதாகசொல்லப்பட்டது.
அது எப்படி இஸ்லாமிய பெண் கதாபாத்திரம் போன்று திரையில் காட்டலாம் இது எங்கள் மத உணர்வுகளை புண்படுத்துகிறது என இஸ்லாமிய அமைப்புகள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து, எதிர்ப்புகளும் கிளம்பின.இஸ்லாமிய அமைப்புகள் படம் வெளியிட்ட திரையரங்கில் சென்று எதிர்ப்பை தெரிவித்தனர். திருவாரூரில் படத்தை திரையிட விடாமல் போராட்டம் வேறு நடந்தது.
இந்தநிலையில் இஸ்லாமியரான படத்தின் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் ஃபர்ஹானா படத்திற்கு ஆதரவாக தனது கருத்தினைதெரிவித்திருந்தார்.திரையுலகை சேர்ந்த சில நடிகர்களும் இந்த ஃபர்ஹானா படத்தில் மதம் எதுவும் புண்படுத்தப்படவில்லை என கருத்தை தெரிவித்தனர். இதைத்தவிர, போலவே,முக்கியமான இஸ்லாமிய பிரபலங்கள், இஸ்லாமிய அரசியல் கட்சியைசேர்ந்தவர்களுக்கு இந்தப் படத்தை தனியாக திரையிட்டு காட்டப்பட்டது.
அப்போது ஃபர்ஹானா படத்தை பெரும்பாலானோர் எந்தவித சர்ச்சையான காட்சிகளும் இல்லையென கருத்து தெரிவித்திருந்தனர். ஆனாலும் சில இஸ்லாமிய அமைப்புகள் ஃபர்ஹானா படத்தை விடாமல் எதிர்த்து வந்தனர்.ஃபர்ஹானா படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன், இந்த படம் இஸ்லாமிய மதத்திற்கு எதிராகவோ அல்லது பிரச்சாரம் செய்யக்கூடிய வகையிலோ எடுத்த படம் கிடையாது..
இஸ்லாமிய நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கும் வகையிலேயே படத்தை எடுத்துள்ளேன் என்று விளக்கம் தெரிவித்திருந்தார்.. ஆனாலும் இஸ்லாமிய அமைப்புகள் இந்த படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷூக்கு எதிர்ப்புதெரிவித்து போராட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்..
இதனையடுத்து சென்னை தியாகராய நகர், அபிபுல்லா சாலையில் உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் நான்கு காவலர்கள் நடிகை வீட்டில் பாதுகாப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இதெற்கெல்லாம் நடுவில் நேற்று காலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அன்னையர் தினம் விருது வழங்கும் விழாவில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பெயர் இடம்பெற்றிருந்தது.. ஆனால், அந்த நிகழ்வில் நடிகையின் தாய் நாகமணிக்கு விருதும் வழஙகப்பட்டது. ஆனால் போராட்டத்தின் காரணமாக ஐஸ்வர்யா இந்த விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்தார்.
இப்படி செக்குலரிஸ்ட் ஆக சுற்றி வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்பொழுது போலீஸ் காவலில் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் இனி திரையுலகில் மற்ற யாரும் செக்குலரிஸ்ட் ஆக பேசுவதற்கே யோசிப்பார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
சபரிமலை விவகாரம் முதல் தனது படங்களில் கருத்துக்களை அள்ளிவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்சிற்கு சகிப்பு தன்மை யாரிடம் உள்ளது என தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது பர்ஹான திரைப்படம்.