24 special

காவல்துறைக்கு ஆதரவாக அண்ணாமலை....! பெருகும் காவல்துறை அதிகாரிகளின் ஆதரவு...! திகைத்த திமுக அரசு...!

annamalai, tamilnadu police
annamalai, tamilnadu police

தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து அவர் பார்வைக்கு வரும் ஒவ்வொரு கோரிக்கைகள் மற்றும் தமிழக அரசால் நிறைவேற்றப்படாதவற்றை தெரிவித்து அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு ஈடுபடுவதற்கான முதல் குரலாக இவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது என் மண் என் மக்கள் நடை பயணத்தில் முதல் கட்ட யாத்திரை முடிந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார், இருப்பினும் தாம்பரம் ஆவடி காவல் ஆணையரகத்தில் காவலர் உணவுப்படி நிலுவையில் உள்ள தகவல் அண்ணாமலையின் பார்வைக்கு வர அது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில் காவலர்களுக்கு ஆதரவாக தமிழக அரசின் மீது கேள்வி எழுப்பியுள்ளார். 


அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தில், காவலர்களுக்கு, கடந்த ஜனவரி மாதம் முதல் வரை உணவுப் படி வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நாள் ஒன்றுக்கு 300 வீதம், ஒவ்வொரு மாதமும் 26 நாட்களுக்கு ரூபாய் 7800 என்ற முறையில் ஒவ்வொரு காவலருக்கும் சுமார் 45 ஆயிரம் ரூபாய் வரை உணவுப் படி வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளார்கள்.ஊழல் செய்து சிறையில் இருக்கும் அமைச்சருக்கு மாத ஊதியத்தை மறுக்கவோ, தாமதப்படுத்தவோ செய்கிறதா இந்த ஊழல் திமுக அரசு? தன்னலமின்றி, நேரம் காலம் நோக்காமல், பொதுமக்களைப் பாதுகாக்க ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் காவல்துறையினருக்கு, ஜனவரி மாதம் முதல், ஐந்து மாதம் இருபது நாட்களுக்கான உணவுப்படியை வழங்காமல் மறுப்பதும், ஜூன் 20 ஆம் தேதியிலிருந்து வழங்குவதாகச் சொன்ன உணவுப்படியை வழங்காமல் தாமதப்படுத்துவதும் அவர்களுக்கு இந்த அரசு செய்யும் அநீதியாகும்.

உடனடியாக, ஆவடி மற்றும் தாம்பரம் ஆணையகக் காவலர்களுக்கான உணவுப் படியை, ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு மொத்தமாக வழங்க வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாவலர்களான காவல்துறையினரை வஞ்சிக்க வேண்டாம் என்றும், தமிழக பாஜக சார்பாக திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே அண்ணாமலைக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்த போலீசார் இருந்து வருகிறார்கள் அவர்கள் தான் அண்ணாமலைக்கு சில முக்கிய ரகசிய தகவல்களை தெரிவிக்கிறார்கள் என்று அரசியல் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்பொழுது காவல்துறை அதிகாரிகளுக்கு இருந்த பிரச்சனை குறித்த அண்ணாமலை குரல் எழுப்பியது வேறு ஆளும் திமுக அரசுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது, காரணம் ஆட்சி நிர்வாகத்தில் முதுகெலும்பாக இருக்கும் காவல்துறையே தற்போது அண்ணாமலைக்கு ஆதரவாக இருப்பது நல்லதல்ல என திமுகவின் தலைமையகமான அறிவாலயத்தில் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஏனென்றால் அண்ணாமலை தனது நடை பயணத்தை மேற்கொண்டு அதில் மக்களை தன் பக்கம் திருப்பி உள்ளார் அதற்கு ஏற்ற வகையில் திமுக அமைச்சர்களின் குற்றங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது தேர்தலுக்கு முன்பாகவே தேர்தல் இப்படித்தான் இருக்கும் இந்த முடிவு இப்படி இருக்கலாம் என்ற பல அனுமானங்கள் மற்றும் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற விருப்பங்கள் மக்கள் மத்தியில் இருப்பதையும் வெளியாகி வரும் ஒவ்வொரு வீடியோக்கள் மூலமாக காண முடிகிறது இந்த சமயத்தில் காவலர்களின் ஆதரவும் அண்ணாமலை பக்கம் திரும்புவது திமுகவிற்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.மேலும் அண்ணாமலைக்கு யார் தகவல் சொல்வது என தலைமை செயலகத்தில் வேறு சலசலப்பு எழுந்துள்ளதாக அதன் காரணமாக எல்லா அதிகாரிகளுக்கும் இதனை கண்டுபிடிக்க ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்..