24 special

கெத்தாக நிற்கும் ஆளுநர்...! சரணடைந்த திமுக தரப்பு...!

R.N Ravi, mk stalin
R.N Ravi, mk stalin

ஒவ்வொரு வருடமும் அரசு பணிகளில் பணியாற்றுவதற்கு தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்தும், இதற்கு ஒரு தலைவர் மற்றும் 13 உறுப்பினர்கள் கொண்ட ஒரு அமைப்பு இருக்கும். இந்த அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பணிஇடங்கள் காலியாக உள்ளதால் இந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டாலும் அதற்கான நேர்முகத் தேர்வுகள் மற்றும் நியமனங்களை மேற்கொள்வதற்கான பணியாளர்கள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகர்கோவிலை சேர்ந்த தமிழ்நாட்டின் காவல் தலைமை இயக்குனராக பணியாற்றிய  டி ஜி பி சைலேந்திரபாபு கடந்த ஜூன் மாத இறுதியில் ஓய்வு பெற்றார். இதனால் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் தலைவராக இவரை நியமிக்கலாம் என்ற வகையில் தமிழக அரசு ஆளுநரிடம் பரிந்துரை செய்தது. 

இதனைத்தொடர்ந்து டி என் பி எஸ் சி யின் தலைவர் பதவிக்கு முன்னால் டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபுவையும் அதன் உறுப்பினர்கள் பதவிக்கு மற்ற சிலரையும் பரிந்துரைத்து தமிழக அரசு ஆளுநரின் ஒப்புதலுக்காக இது குறித்த கோப்புகளை அனுப்பி உள்ளது. ஆளுநர் இந்த கோப்புகளை பெற்ற பிறகு இது தொடர்பான கேள்வி ஒன்றை தற்போது எழுப்பி இந்த கோப்புகளை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர்களின் நியமனங்கள் குறித்த கோப்புகளுக்கு ஆளுநர் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுவது, அரசு பணியாளர்களின் தேர்வாணைய தலைவர்களை நியமிப்பதில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த விவரங்களை தரும்படியும், அதோடு தலைவர்களை நியமிப்பதற்காக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளான வெளிப்படை அறிவிப்புகள் விளம்பரங்கள் ஏதேனும் செய்யப்பட்டதா? இந்த பதவிக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் அந்த விண்ணப்பங்களின்படி மேற்கொள்ளப்பட்ட கலந்தாய்வுகள், இந்த கலந்தாய்வு கலந்து கொண்டவர்களின் விவரங்கள் என அனைத்தையும் கேட்டு இதற்கான விளக்கத்தை தமிழக அரசு தர வேண்டும் என்று ஆளுநர் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது மட்டுமல்லாமல் அரசு பணியாளர்களை தேர்வு செய்யும் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுபவரின் பதவிக்காலம் 6 ஆண்டுகளே அல்லது அவரது வயது 62 தான் உச்சவரம்பு இப்படி இருக்கும் பட்சத்தில் 61 வயதாக இருக்கும் ஒரு நபரை டிஎன்பிஎஸ்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதன் அவசியம் என்ன? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். இவை அனைத்திற்கும் தமிழக அரசு பதிலளிக்க முடியாமல் ஆளுநர் கேட்ட விளக்கத்தை அனுப்புவதற்கு தாமதப்படுத்தி வந்துள்ளது. இந்த நிலையில், தமிழக ஆளுநர் கேட்ட விளக்கங்கள் அனைத்தையும் திமுக அளித்து மீண்டும் இந்த கோரிக்கையை ஆளுநரிடம் முன் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழக அரசால் ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்ட விளக்கத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக செய்தித்தாள்களில் விளம்பரங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு மேலும் சைலேந்திரபாபுவை தலைவராக நியமிப்பதற்கான பரிந்துரையை மீண்டும் வலியுறுத்தி உள்ளது திமுக அரசு! இதன் பின்னணியை விசாரித்த பொழுது ஆளுநரின் பிடிவாதத்திற்கு திமுக மாடல் அரசு சரணடைந்து அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

காரணம் சைலேந்திரபாபு நியமன விவகாரத்தில் ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசிடம் போதிய பதில் இல்லை ஏனெனில் தமிழக அரசு சைலேந்திரபாபுவை விருப்பத்தின் காரணமாக நியமித்ததே தவிர தேர்வு செய்து அல்ல அதனை தமிழக அரசு ஒப்புதல் கொடுக்க வேண்டும் என ஆளுநர் முடிவு செய்து காய்களை நகர்த்தி வெற்றி பெற்றுவிட்டார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.து மட்டுமல்லாமல் அரசு பணியாளர்களை தேர்வு செய்யும் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுபவரின் பதவிக்காலம் 6 ஆண்டுகளே அல்லது அவரது வயது 62 தான் உச்சவரம்பு இப்படி இருக்கும் பட்சத்தில் 61 வயதாக இருக்கும் ஒரு நபரை டிஎன்பிஎஸ்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதன் அவசியம் என்ன? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். இவை அனைத்திற்கும் தமிழக அரசு பதிலளிக்க முடியாமல் ஆளுநர் கேட்ட விளக்கத்தை அனுப்புவதற்கு தாமதப்படுத்தி வந்துள்ளது. 

இந்த நிலையில், தமிழக ஆளுநர் கேட்ட விளக்கங்கள் அனைத்தையும் திமுக அளித்து மீண்டும் இந்த கோரிக்கையை ஆளுநரிடம் முன் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழக அரசால் ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்ட விளக்கத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக செய்தித்தாள்களில் விளம்பரங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு மேலும் சைலேந்திரபாபுவை தலைவராக நியமிப்பதற்கான பரிந்துரையை மீண்டும் வலியுறுத்தி உள்ளது திமுக அரசு! இதன் பின்னணியை விசாரித்த பொழுது ஆளுநரின் பிடிவாதத்திற்கு திமுக மாடல் அரசு சரணடைந்து அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

காரணம் சைலேந்திரபாபு நியமன விவகாரத்தில் ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசிடம் போதிய பதில் இல்லை ஏனெனில் தமிழக அரசு சைலேந்திரபாபுவை விருப்பத்தின் காரணமாக நியமித்ததே தவிர தேர்வு செய்து அல்ல அதனை தமிழக அரசு ஒப்புதல் கொடுக்க வேண்டும் என ஆளுநர் முடிவு செய்து காய்களை நகர்த்தி வெற்றி பெற்றுவிட்டார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.