24 special

அசுர பலத்துடன் இறங்கப் போகும் பாஜக....! திட்டமே வேற லெவலாம்....!

pm modi
pm modi

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஆறு மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் ஒவ்வொரு கட்சியும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் தேர்தல் குறித்து அறிவிப்புகள் வெளிவந்து அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக ஹார்ட்ரிக் வெற்றியை பெறுவதற்காக என்டிஏ அணியும் அதனை வீழ்த்துவதற்காக இண்டியா அணியும் சில திட்டங்களை தீட்டி வருவது செய்தித்தாள்களில் தலைப்புகளாக இடம்பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் சில முக்கிய பத்திரிகை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் கருத்துக்கணிப்புகள் ஒவ்வொன்றும் அதிரடி முடிவை கூறி தமிழகத்தின் ஆளும் அரசுக்கும் மத்தியில் எதிர்க்கட்சியாக இருக்கும் அரசுக்கும் அதிர்ச்சிகளை கொடுத்து வருகிறது.


அதாவது மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி மத்தியில் பிரதமராக அமருவார் என்று கருத்து கணிப்பின் முடிவுகள் தெரிவிக்கிறது, அதற்கேற்ற வகையில் பாஜகவும் 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்காக பல புதிய உத்திகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் இந்த வருட இறுதிக்குள் அல்லது அடுத்த வருட தொடக்கத்திலேயே நடத்தப்படலாம் என்று அதிர்ச்சிகர தகவலை திமுகவை சேர்ந்த எம்பி டி ஆர் பாலு தெரிவித்ததும் அவரது கருத்தை ஒத்து மத்தியில் மம்தா பானர்ஜி தெரிவித்ததும் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒரு பூகம்பத்தை கிளப்பியுள்ளது. ஆனால் அவை அனைத்திற்கும் தயாராக இருக்கும் பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் தனது சிறப்பான தேர்தல் வேலைகளை செய்து வருகிறது. தமிழகம் சார்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார், அது நல்ல வரவேற்பை பெற்று பாஜகவிற்கு சாதகமான சூழ்நிலையை அமைத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது அடுத்த உத்தியாக ஒவ்வொரு மாநிலங்களின் தொகுதிகளிலும் இளைஞர்களை வேட்பாளர்களாக நியமிக்க உள்ளதாக பாஜக தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும் இளைஞர்களின் முகங்கள் அனைத்துமே புதிய முகங்களாக தான் இருக்கும் என்றும் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறுபவர்களில் பாதி பேர் புதிய முகங்களாக இருக்க பாஜக திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு கட்சியில் புதிய இளைஞர்களின் பிரவேசம் அதிகமாக இருக்க வேண்டும் என்றும் ஏற்கனவே இருந்த அமைச்சர்களில் 75 வயதை எட்டியவர்கள் அனைவரும் தேர்தலில் ஈடுபடுவது குறைக்கப்பட்டுள்ளது. அதோடு தற்போது பாஜக சார்பில் நாடாளுமன்றத்தில் எம்பியாக இருக்கும் சில முக்கிய எம்பிகளையும் மக்களவைத் தேர்தலில் நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. 

அந்த வகையில் அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான், நிர்மலா சீதாராமன் ஆகியோர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளதாக பாஜக தரப்பிலிருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி பாஜக இளம் வயதினருக்கு அதிக வாய்ப்புகளை கொடுக்க உள்ளது என்ற தகவல் எதிர்க்கட்சியினருக்கு தெரிந்த உடனே இப்பொழுதே எதிர்க்கட்சி முகாமில் இருந்து பல அதிர்வலைகள் எழுந்துள்ளது காரணம் எதிர்க்கட்சி கூட்டணியில் பெரும்பாலான வேட்பாளர்கள் அரசியல் வாரிசுகளாகவும், தலைவர்களின் வாரிசுகளாகவும் உள்ளனர் அவர்களை புது வேட்பாளர்களை வைத்து எதிர்ப்பது எதிர்க்கட்சி கூட்டணிக்கு பலவீனமாகும். எனவே இதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் எதிர்க்கட்சி தரப்பினர் புலம்பி வருகின்றனர். 

மேலும் இந்த புதுமுகங்களை வைத்து வாரிசு அரசியல், இதுநாள் வரை மாநில கட்சிகள் அடித்த கொள்ளை என பாஜக பெரிய அளவில் பிரச்சாரத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாம், அதுவும் DMK Files போன்று பல ஊழல் பட்டியல்களை இந்த இளைஞர் பட்டாளத்தை வைத்தே மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல பாஜக திட்டமிட்டிருப்பதாகவும் இது மட்டும் நடந்தால் எதிர்முகாம் கண்டிப்பாக திணறும் எனவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.