24 special

அண்ணாமலை வெளியிட்ட ஆடியோவால் ஆட்டம் கண்டுள்ள திமுக அரசு...! அதிகாரிகளை மாற்றும் முதல்வர்

Mk Stalin,annamalai
Mk Stalin,annamalai

திடிரென 48 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை மாற்றம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிடத்தின் பின்னணி என்ன சமீபகாலமாக அதிலும் குறிப்பாக அண்ணாமலை பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ வெளியிட்டதற்கு பிறகு தமிழக அரசின் நிர்வாகம் மற்றும் அமைச்சரவை ஆட்டம் கண்டு வருகிறது.


பின்னர் திமுக அமைச்சரவை மாற்றப்பட்டது, மாற்றப்பட்டதை தொடர்ந்து இந்த வாரம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி பல உயிர்கள் பறிபோனது, இந்த கள்ளச்சார உயிரிழப்பிற்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது, இத்தனைக்கும் கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆய்வு சென்றும் தற்போது நடந்துள்ள கள்ளச்சாராய விவகாரம் பெரும அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திமுக தலைமையகம் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி உள்ளனர் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அதனால் இனி வேறு வழி இல்லை இப்படியே இருந்தால் ஆட்சிக்கு தான் ஆபத்து என திட்டமிட்டு முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளை ரெய்டு விட்டது மட்டுமல்லாமல் இடமாற்றம் செய்யவும் உத்தரவிட்டு உள்ளார் என தலைமை செயலக வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

முதல்வரின் செயலர், உள்துறைச் செயலர், நிதித்துறை செயலர், ஊரக வளர்ச்சி துறை செயலாளர்,  மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் என 48 ஐ ஏ எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத் துறை செயலாளராகவும், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக முருகானந்தமும், அமுதா அவர்கள் உள்துறைச் செயலாளராகவும், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக கோபாலையும், ராதாகிருஷ்ணனை சென்னை மாநகராட்சி ஆணையராகவும், ஊரக வளர்ச்சி துறை செயலாளராக செந்தில்குமாரையும், சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராகவும், போக்குவரத்து துறை செயலாளராக பணீந்திர ரெட்டியையும் முதல்வர் மு க ஸ்டாலின் மாற்றியுள்ளார். 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சில ஆதாரங்களே ஆளும் கட்சியாக இருந்தாலும் அவர்களை ஆட வைத்து அமைச்சரவை மாற்றத்தையே கொண்டு வந்துள்ளது. தங்கள் மீது தவறு இருந்தாலும் அது அமைச்சர்களின் பக்கம் திருப்புவது போன்று இந்த அமைச்சரவை மாற்ற நடக்கப்பட்டுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்ற நிலையில் இப்படி திடீரென ஒன்றல்ல இரண்டல்ல 48 அதிகாரிகளை இடமாற்றம் செய்திருப்பதற்கு என்ன காரணம் என்ற தேடலும் மற்ற அரசியல் கட்சியினர்களிடையேவும், அரசியல் விமர்சகர்கள் இடையேவும் அதிகரித்துள்ளது. 

இப்படி திடீரென ஏற்பட்ட மாற்றம் மட்டும் அல்லாமல் இன்னும் சில மாற்றங்களும் நடக்க உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் பின்னணியில் என்ன என்பதை விசாரித்த பொழுது ஏற்கனவே அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் இப்படி தமிழகம் எங்கும் பல அதிருப்திகள் ஆளும் அரசிற்கு எதிராக எழுந்து வருகிறது,  இதற்கெல்லாம் காரணம் அமைச்சர்கள் மட்டுமல்லாமல் அதிகாரிகளும் தான் என அமைச்சர்களை நான் பார்த்துக் கொள்கிறேன் அதிகாரிகளை அமைச்சர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முதல்வர்  உத்தரவிட்டுள்ளார். 

முதல்வரின் இந்த திடீர் மாற்றம் அதிகாரிகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த அதிகாரிகள் மாற்றத்திற்கு பிறகு இன்னும் பல அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் அல்லது இப்போ நடந்த மாற்றமே மறுபடியும் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மே மாதம் முடிந்து ஜூன் மாத தொடக்கத்தில் மற்றொரு டிரான்ஸ்பர் லிஸ்ட்டை வெளியிடுவதற்கு தற்பொழுது முதல்வர் அலுவலகம் புதிய லிஸ்டை தயாரித்துக் கொண்டிருக்கிறதாக கூறப்படுகிறது. இந்த புதிய அதிகாரிகள் மாற்றம்  ஜப்பான் பயணத்திற்கு பிறகு இருக்கும் என தெரிகிறது.