ஒரே தேசம் ஒரே சட்டம் அதிரடியில் இறங்கும் ஆர்எஸ்எஸ் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பாஜகவிற்கு தேவை அதிக அளவிலான எம்பிகள். அதனை பெற வேண்டும் என ஆர்எஸ்எஸ் சங்கமும் முடிவு செய்துள்ளது. அதற்காக 400 அளவிலான எம்பிக்களை குறி வைத்து ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக வேலை செய்து வருகிறது.
இதற்கான பணிகளை ஆர்எஸ்எஸ் முன்பே துவங்கி விட்டது என்று கூறலாம் அதன்படியே பல்வேறு மாவட்டங்களில் ஆர் எஸ் எஸ் இன் பயிற்சி முகாம்கள் தொடங்கப்பட்டது. மேலும் இதுவரை செல்லாத இடங்களுக்கு எல்லாம் சென்று தங்களது ஆதரவை உறுதிப்படுத்தவும் களப்பணிகளை ஆற்றி வருகிறது. பாஜக பெற இருக்கும் சிறுபான்மையினர்களின் வாக்குகளை குறிவைத்து அதை பெறுவதற்கான முழு பணிகளையும் ஆர் எஸ் எஸ் தலைமை ஏற்று பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக கடந்த முறை பிரதமர் நரேந்திர மோடி கேரளாவிற்கு வருகை தந்த பொழுது முக்கிய கிறிஸ்தவ அமைப்புகளின் தலைவர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இரண்டு நாள் பயணமாக கேரள மாநிலத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு தேவாலயங்கள் மற்றும் 8 கிறிஸ்தவ அமைப்புகளின் தலைவர்களை சந்தித்தார்.
கிறிஸ்தவ தலைவர்கள் அவர்கள் தரப்பில் இருக்கும் கோரிக்கைகளை பிரதமர் இடம் முன் வைத்தனர், மேலும் தங்கள் மாநிலத்திற்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகளைப் பற்றியும் கலந்துரையாடியதாக செய்தியாளர்களிடம் கூறப்பட்டது. 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக அதிக செல்வாக்குகளை பெற்ற சிறுபான்மை சமூகத்தினரை தன் பக்கம் எடுக்கும் முயற்சியில் பாஜக தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அதில் ஒரு பகுதியாகவே பிரதமர் நரேந்திர மோடி கேரளாவிற்கு வருகை தந்த பொழுது கிறிஸ்தவ அமைப்பின் தலைவர்களை சந்தித்தது பார்க்கப்படுகிறது.
தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக ஆர் எஸ் எஸ் அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய ராஷ்ட்ரீய மஞ்ச் என்ற அமைப்பு சிறுபான்மையினர் ஓட்டுகளை கவர்வதற்காக நாடு தழுவிய பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஆர் எஸ் எஸ் அமைப்பின் கீழ் சிறுபான்மையினர் பிரிவாக எம்ஆர்எம் எனப்படும் இஸ்லாமிய ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பு 2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு இஸ்லாமியர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக நாடு முழுவதும் பிரச்சாரத்தை மேற்கொள்ள நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த பிரச்சாரம் ஒரே தேசம், ஒரே கொடி, ஒரே தேசிய கீதம், ஒரே சட்டம் என்ற கருத்தை மையமாக வைத்து தொடங்க உள்ளதாகவும், நாடு முழுவதும் இருக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படி பிரச்சாரத்தில் கலந்து கொள்ளும் தன்னார்வலர்களுக்கு ஜூன் 8 முதல் 11ஆம் தேதி வரை பயிற்சி முகாம்களும் மத்திய பிரதேசத்தில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முதலில், தமிழக மற்றும் கேரளாவிற்கு பிரதமர் வருகை தந்த பொழுது முக்கிய கிறிஸ்தவ தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதும், தற்போது ஆர் எஸ் எஸ் இஸ்லாமியர்களின் வாக்குகளில் கவர்வதற்காக நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்கியதும் பாஜகவினர் சிறுபான்மையினரை தங்கள் பக்கம் முழுமையாக ஈர்க்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே கருதப்படுகிறதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இப்படி சிறுபான்மையினரின் வாக்குகளை இரண்டாகப் பிரித்து தனித்தனியாக தனது அரசியல் வேலைகளை தொடங்கி கொண்டிருக்கின்றது பாஜக.
பாஜகவின் இந்த அதிரடி களப்பணியால் எதிர்க்கட்சி முகாமில் கலக்கம் ஏற்பட்டுள்ளது இன்னும் பிரதமர் வேட்பாளரே யார் என தெரியாமல் எதிர்க்கட்சி முகாம் இருந்து வரும் வேளையில் இப்படி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தேர்தல் பணிகளைப் பிரித்து செய்து கொண்டிருப்பது எதிரிகளுக்கு தோல்வி பயத்தை இப்பொழுதே கொடுத்து வருகிறது என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.