கர்நாடக மாநிலத்தில் யார் முதல்வர் என்ற நீண்ட நாள் விவாதம் முடிவடைந்த நிலையில் தற்போது அதிகார பூர்வமாக சித்தராமையா முதல்வராகவும், துணை முதல்வராக சிவகுமாரும் பதவி ஏற்பார்கள் என காங்கிரஸ் மேலிட தலைமை அறிவித்து இருக்கிறது.
ஒருவழியாக முதல்வர் யார் என்ற போட்டி முடிவடைந்த நிலையில், தற்போது சிவக்குமாரும் அவரது சகோதரரும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு சேர இன்னும் நீண்ட காலம் இருக்கிறது என்று ஊடகங்களுடம் தெரிவித்து இருப்பது காங்கிரஸ் மேலிட தலைமையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது .
கட்சியின் நலன் கருதியே, சிவக்குமார் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க முன்வந்திருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் நலன் இதில் அடங்கியிருந்தாலும், சிவகுமார் மகிழ்ச்சியோடு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்கவில்லை என்று சிவகுமாரின் சகோதரர் சுரேஷ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்
காங்கிரஸ் கட்சியின் மூத்த மற்றும் முக்கிய தலைவர்கள் பலரையும் நேற்று சித்தராமையாவும், சிவக்குமாரும் தில்லியில் சந்தித்து பேசினர். கடைசியாக, சோனியா காந்தியிடம் சிவக்குமார் பேசியபிறகுதான், கர்நாடக மாநிலத்தில் துணை முதல்வர் பதவியை சிவக்குமார் ஏற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார் என்று கூறப்படும் நிலையில்
ஆங்கில ஊடகத்துக்கு சிவக்குமார் அளித்த பேட்டியில், சோனியா காந்தி என்னிடம் கர்நாடக மாநிலத்தை நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்று எனக்கு உங்கள் மீது அதீத நம்பிக்கை இருக்கிறது. நான் இங்கு அமர்ந்துகொண்டு எனது அடிப்படையான பொறுப்புகளை கவனித்து வருகிறேன்.
நீங்களும் உங்களது அடிப்படை பொறுப்புகளை கவனியுங்கள், கட்சியின் மீது நம்பிக்கையும் நன்றியும் கொண்டிருங்கள். இந்த வெற்றிக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்ற உண்மையை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நான் எதற்கு வருத்தம் அடையவேண்டும் இன்னும் போகும் தூரம் வெகு தூரம் இருப்பதாக சிவகுமார் குறிப்பிட்டார், இதே வார்த்தையை தான் சிவகுமாரின் சகோதரர் சுரேசும் குறிப்பிட்டு இருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் எப்போதும் மத சார்பற்ற ஜனதா தளத்திற்கு சென்ற வாக்குகளை அதிக அளவில் காங்கிரஸ் கட்சிக்கு கொண்டுவந்தவர் சிவகுமார், காங்கிரஸ் வெற்றி பெற்றால் சிவகுமார் முதல்வராக வருவார் என்பதால் பல ஒக்காலியா சமூகத்தை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தங்கள் வாக்குகளை செலுத்தி இருந்தனர்.
ஆனால் தற்போது சிவகுமாருக்கு முதல்வர் பொறுப்பு கொடுக்காமல் இருப்பதால் வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநிலத்தில் பெரும் பின்னடைவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநிலத்தில் தனி பெரும் கட்சியாக ஆட்சியை பிடித்த நிலையிலும், அது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு உதவும் என காங்கிரஸ் கணக்கு போட்ட நிலையில் சிவகுமார் கொடுத்த பேட்டி.. உள்ளூர் சமூக பிரச்சனை போன்ற காரணங்களால் வெற்றி பெற்றும் கொண்டாட முடியாத நிலைக்கு காங்கிரஸ் டெல்லி தலைமை இருக்கிறதாம்.
எப்படி ராஜஸ்தான் மாநிலத்தில் சொந்த கட்சியை சேர்ந்த அசோக் கெளாட்டிற்கு எதிராக சச்சின் பைலட் போராட்டம் நடத்தி வருகிறாரோ அதே நிலைமை கர்நாடக மாநிலத்திலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அரங்கேரலாம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.