24 special

சொந்த ஊருக்கு சென்ற அண்ணாமலை...! இதுதான் காரணமா...?

annamalai
annamalai

கரூர் மாவட்டம், க.பரமத்தி அடுத்த சூரியம்பாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ கருங்கரட்டு பழனியாண்டவர் மற்றும் இடும்பன், மாயவர், கருப்பண்ணசுவாமி, மலையாள கருப்பண்ணசுவாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு இன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.காவிரி ஆற்றில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தீர்த்தம் கொண்டு வந்த பிறகு முதல் கால யாக வேள்வி, இரண்டாம் கால யாக வேள்வி, மூன்றாம் கால யாக வேள்வி என நான்கு கால யாக வேள்வி நடைபெற்றது.


அதை தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனிதத் தீர்த்தத்தை ஆலயத்தின் சிவாச்சாரியார் தலையில் சுமந்தவாறு மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் கோபுர கலசத்திற்கு பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தால் மகா கும்பாபிஷே விழா சிறப்பாக நடைபெற்றது.ஸ்ரீ கருங்கரட்டு பழனியாண்டவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும்  பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி மகா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திடீர் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.