கடந்த ஒரு மாத காலமாக இணையதளத்தில் மட்டுமல்லாமல் செய்திகளில் அடிக்கடி இடம் பெயரும் பெயராக 'லியோ' இருந்தது. லியோ படம் தமிழ் சினிமாவின் முதல் ஆயிரம் கோடி வசூல் படமாக இருக்கும் என விஜய் தரப்பினர், விஜய் ரசிகர்கள் அதிக அளவில் கூறிவந்தனர். எந்த youtube சேனல் இன்டர்வியூ எடுத்தாலும் லியோ படத்தில் என்ன இருக்கும்? லியோ படம் எப்படி எல்லாம் எடுக்கப்பட்டது? லியோ படத்தில் இடம்பெற்ற காட்சிகள் எல் சி யு வில் வருகிறதா? என பல்வேறு கேள்விகள் பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இது மட்டுமல்லாமல் படத்தின் சிறப்பு அனுமதி, அதிகாலை 4 மணி காட்சிக்கு சிறப்பு அனுமதி, நீதிமன்றத்தில் வழக்கு, இசை வெளியீட்டு விழா ரத்து என அடிக்கடி 'லியோ' படத்தின் பெயர் செய்திகளில் அடிபட்டது. எல்லாவற்றிற்கும் பின்னணியில் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது அதன் காரணமாகத்தான் எங்கு பார்த்தாலும் லியோ என இருக்கிறது என்று விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் இது குறித்து ஒரு சில சினிமா விமர்சகர்களிடம் கேட்ட பொழுது இது எல்லாவற்றிற்கும் பின்னணியில் 'மார்க்கெட்டிங் யுத்திதான் தான் உள்ளது, லியோ... லியோ... என பேச வேண்டும் அதற்காகவே தயாரிப்பாளர் லலித்குமார் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார் இது செலவில்லாமல் அவருக்கு வரும் விளம்பரம் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இப்படி பலதரப்பட்ட கருத்துக்களுக்கு நடுவில் வெளியான 'லியோ' பெரிய அளவில் பின்னடைவை சந்தித்தது, குறிப்பாக முதல் நான்கு நாட்கள் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை என்பதால் நல்ல வசூலை எட்டியது. அதற்கு காரணம் விஜய் ரசிகர்கள் தான், ஆனால் விஜயதசமி விடுமுறை முடிந்த அடுத்த நாளே படத்தின் டிக்கெட் புக்கிங் எண்ணிக்கையில் ஆர்வம் குறைந்ததும் லியோ திரைப்படத்தால் எங்களுக்கு நஷ்டமே லாபம் கிடையாது என திரையரங்குகள் உரிமையாளர்கள் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இது எல்லாவற்றிற்கும் மேலாக திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் 'லியோ திரைப்படத்தால் எங்களுக்கு திரையரங்கு பராமரிப்பு செலவு மட்டும் தான் கிடைத்தது, லாபம் கிடையாது' என ஒரேடியாக போட்டு உடைத்தார். இது எல்லாவற்றிற்கும் மேலாக இதனால் வரையில் தோல்வி படமே கொடுக்காத இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு இது பெரிய அடி என கருத்து விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் லியோ வெற்றி விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்து நடந்துள்ளது, ஆனால் இந்த வெற்றி விழாவே ஒரு நாடகம் என்கின்றனர் சில திரையுலக முக்கியஸ்தர்கள். அவர்களிடம் இது குறித்து பேசும் பொழுது லியோ திரைப்படம் எல்லாருக்கும் தெரியும். மிகப் பெரிய அடி வாங்கிவிட்டது என ஆனால் லியோ திரைப்படம் ஜெயிலர் வசூலை தாண்டிவிட்டது என காண்பிப்பதற்காகவும் லியோ திரைப்படம் தோல்வி கிடையாது வெற்றி தான் என திரையுலகில் விளம்பரப்படுத்துவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டது தான் இந்த வெற்றி விழா, வெற்றி விழா கொண்டாட்டங்கள் என்பதெல்லாம் முன்பெல்லாம் திரையுலகில் 150 நாட்கள் 200 நாட்கள் ஓடிய படத்திற்குத்தான் வைப்பார்கள்.
ஆனால் பாருங்கள் ஒரு வாரம் ஓடிய படத்திற்கு வெற்றி விழா என எப்படி கொண்டாட முடியும்? ஏற்கனவே வாரிசு ஏற்பட்ட தோல்வியின் தாக்கம் தான் லியோ படத்திலும் எதிரொலித்தது இது அடுத்த படத்திலும் எதிரொலிக்க கூடாது என்பதற்காக விஜய் தரப்பு செய்த டிராமா தான் இந்த வெற்றிவிழா என்கின்றனர். இது மட்டுமல்லாமல் லியோ திரைப்படம் வந்தால் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் அடிக்கும்! லியோ திரைப்படம் தோல்வி கிடையாது வெற்றி படம் தான்! பார்த்தீர்களா எவ்வளவு கோடி ரூபாய் வசூல் என்றெல்லாம் இணையத்தில் இரவு, பகல் பாராது பதிவிட்டு உழைத்த ரசிகர்களை கண்டுகொள்ளாமல் 'ரசிகர்கள் அனுமதி கிடையாது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சொல்லும் ஆட்களுக்கு மட்டும்தான் அனுமதி' என பெரிய குண்டை வேற தூக்கி விஜய் ரசிகர்கள் தலையில் போட்டு அதிலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது விஜய் தரப்பு...உங்களுக்காக உழைத்த எங்களை இப்படி வெற்றி விழாவிற்கு கூட அழைக்காமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் எனக் குமுறி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்...