பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதாக அறிவித்த பின் அதிமுக நிர்வாகிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். தற்போது அதிமுகவை பாஜக தான் வெளியில் அனுப்பி வைத்தது என்று அரசியல் விமர்சகர்கள் தகவலை தெரிவித்தது பாஜக நிர்வாகிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியில் இருந்து விலகி தனித்து தேர்தலை சந்திப்பதாக தெரிவித்தார்.
அதன் பின் பாஜகவும் தேர்தலை தனித்து சந்திப்பதாக அறிவித்தது. இந்நிலையில் பொதுச்செயலாளரான இபிஎஸ் முதன்முறையாக தென் மாவட்டத்திற்கு சென்றார். குரு பூஜையில் பங்கேற்றபோது சிலர் எடப்பாடி ஒழிக!..இபிஎஸ் ஒழிக என்று கோஷம் எழுப்பினர். மேலும் அவரது கார் மீது கற்கள் மற்றும் காலணிகளை வீசினர். இது குறித்து அரசியல் விமர்சகர் கூறுகையில் இபிஎஸ் மீது முக்குலத்தோர் தாக்குதல் நடத்தியது. திட்டமிட்டு திட்டமிட்டது அல்லது. அது தென்னெழுச்சியான எதிர்ப்பு.
எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் வளர்ச்சிக்காக முதலில் சசிகலாவிற்கு துரோகம் செய்தார். அதன் பின் டிடிவி தினகரனுக்கும் துரோகம் செய்தார். அதே போல் அதிமுக முன்னாள் முதலைமச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் துரோகம் செய்தார். இப்படி அதிமுகவில் இருந்த அனைவரையும் நீக்கியதன் காரணமாகவே தொண்டர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டனர் என்று தெரிவிக்கின்றனர். முக்குலத்தோர் மட்டுமின்றி பொது மக்களும் எடப்பாடி பழனிசாமி மீது கோவத்தில் உள்ளனர். எப்படியாவது முக்குலத்தோரின் வாக்கு வங்கியை பெற வேண்டும் என்றே எடப்பாடி பழனிசாமி குரு பூஜைக்கு சென்றார்.
ஆனால் அவர் எதிர்பார்த்த மரியாதையை வரவில்லை என்பதுதான் உண்மை.இது எல்லாம் பாஜக தலைவர் அண்ணாமலை அறிந்துதான் எடப்பாடியை காலாட் விட்டார் என்று கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்த அனைவரையும் நீக்கியதன் காரணமாக மக்களிடம் பாஜகவிற்கு வாக்கு திசை திரும்ப வாய்ப்பு இருப்பதால் தான் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுகவை வெளியேற்றியதாக கூறப்படுகிறது.எடப்பாடிக்கு தமிழக மக்களிடம் பலம் இல்லை என்று அண்ணாமலைக்கு தெரியும். அண்ணாமலை கோவை தொகுதியில் வரவேற்பு உள்ளது அங்கு அவர் ஜெயிக்க முழுமையான வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், கடந்த தேர்தலில்பாஜக அதிமுகவுடன் இருந்தும் கூட குறைவான வாக்குகளை பெற்றது.
பாஜக அதிமுக இல்லாமலே அதற்கு முன்பே நல்ல வாக்குகளை வென்றுள்ளது. இதை எல்லாம் புரிந்துகொண்டதான் அண்ணாமலை எடப்பாடியை விரட்டி அடித்துள்ளார். அண்ணாமலை தான் பாஜகவில் இருந்து அதிமுகவை விரட்டியது அவரே வெளியே வந்து விட்டதாக கூறுவது நம்பத்தக்கது அல்ல.தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துவ, முஸ்லீம் வாக்குகளுக்காக கூட்டணியை உடைத்தார் என்பதெல்லாம் பொய் கதை. அண்ணாமலைக்கு அரசியல் வங்கி நிலவரம் எல்லாம் தெரியும். எடப்பாடிக்கு பலம் இல்லை என்பது அறிந்துதான் அண்ணாமலை, அதிமுகவை கூட்டணியில் இருந்து தூக்கினார் என்று அரசியல் விமர்சகர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.