24 special

அடுத்த பிரதமர் யார்? நாட்டிற்கு மெசேஜ் சொல்லிய பிரதமர் மோடி பாஜகவினர் கொண்டாட்டம்!

amitsha
amitsha

பிரதமர் மோடி குஜராத்தில் நடைபெற்ற பொது கூட்டம் ஒன்றில் பேசியதன் மூலம் பாஜகவினருக்கும் பல்வேறு அரசியல் நோக்கர்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் ஒரு முக்கிய சம்பவத்தை குறிப்பிட்டு கூறி இருக்கிறார் அதாவது அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு நான் என்றும் ஓய்வு எடுக்க போவது இல்லை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.


பரூச் பகுதியில் நடந்த விதவைகள், முதியவர்கள் மற்றும் ஆதரவற்ற குடிமக்களுக்கான குஜராத் அரசின் நிதி உதவித் திட்டங்களின் பயனாளிகள் நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது, முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் பிரதமர் பதவி குறித்து தெரிவித்த கருத்தை அவர் வெளிப்படுத்தினார்.

அதில், "ஒரு நாள் ஒரு பெரியத் தலைவர் என்னைச் சந்தித்தார். அந்தத் தலைவர் எங்களை அரசியல் ரீதியாக அடிக்கடி எதிர்ப்பவர். அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. அரசின் சில முடிவுகளில் அவர் மகிழ்ச்சி அடையவில்லை, அதனால் என்னைச் சந்திக்க வந்தார். சந்திப்பில் அவர் சொன்னார், 'மோடி ஜி, இந்த நாடு உங்களை இரண்டுமுறை பிரதமர் ஆக்கியுள்ளது.

இதற்கு மேல் இன்னும் என்ன வேண்டும்' என்று ஒருவர் இரண்டு முறை பிரதமரானால் அனைத்தையும் சாதித்துவிட்டார் என்பது போல் பேசினார். அவருக்கு மோடி ஒரு வித்தியாசமான குணங்களால் உருவாக்கப்பட்டவர் என்பது தெரியவில்லை. இந்த குஜராத் மண் தான் என்னை உருவாக்கியது. அதனால் தான், இப்போது நான் ஓய்வெடுக்க வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனது கனவு நிறைவேறும்வரை நான் ஓய்வெடுக்க மாட்டேன்." என்று பேசினார்.

2024-ம் ஆண்டு பொது தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்று பல்வேறு ஊடகங்கள் திரித்து கூறின இந்த சூழலில் 2024 மட்டுமல்ல எதிர் வரும் ஆண்டுகளிலும் தான் பிரதமர் வேட்பாளர் என்பதை அனைவருக்கும் தெளிவு படுத்தி இருக்கிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை பாஜகவினர் கொண்டாட தொடங்கியுள்ளனர்.