தமிழகத்தில் திமுக - பாஜக என்ற நிலைமை வந்து விட்டது, இதற்கிடையில் இதில் அதிமுக பேசும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் ஏன்னென்றால் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்த பின் அண்ணாமலை திமுக - பாஜக இடையே தான் மோதல் என தெரிவித்தார். அண்ணாமலை மேற்கொண்டு வரும் பாதயாத்திரையில் திமுக சொன்ன வாக்குறுதிகளை சுட்டி காட்டி வருகிறார். இப்போது டெல்டா மாவட்டத்தில் இருக்கும் அண்ணாமலை மழையின் காரணமாக யாத்திரைக்கு கேப் கொடுத்துள்ளார். இந்த கேப்பில் திமுகவை அலசும் முனைப்பில் பாஜகவினர் ஈடுபட வேண்டும் என நிர்வாகிகளுக்கு அசைன்மென்ட் கொடுத்துள்ளாராம்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் களம் சூடு பிடித்து விட்டது. 2026ம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் புதிய மாற்றத்தை தமிழ்நாட்டில் கொண்டு வர பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை தொடங்கி மாவட்ட வாரியாக சென்று மக்களிடம் குறைகளை கேட்டும் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் பல வாக்குறுதிகளை கொடுத்தது அது இரண்டரை ஆண்டில் என்ன செய்த்திருக்கிறது என மக்களிடம் தெரிவித்து பாஜகவை வளர்த்து வருகிறார். இந்த யாத்திரைக்கு, ஆரம்பத்தில் மக்கள் ஆதரவு தரவில்லை என்று சொல்லி வந்த கட்சியினர் இப்போது பாஜகவின் வளர்ச்சியை கண்டு மவுனம் காத்து வருகிறார்கள்.
தற்போது பாதயாத்திரை 110 தொகுதிகளை தாண்டி டெல்ட்டா பகுதியில் அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார், குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் விவசாயிகளுடன் நிலத்தில் இறங்கி பயிர் நடுதல், மரக்கன்று நடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, மழையின் காரணமாக 'என் மண் என் மக்கள்' யாத்திரைக்கு விடுப்பு விடுத்துள்ளார் அண்ணாமலை. டிசம்பர் 4ம் தேதி வரை மழை பெய்யும் என்பதால் அந்த நாளில் பாஜகவினர் மலை நீர் தேங்கும் பகுதியை பார்க்கும்படியும் அதனை தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்கிறது என்பதை ஆராய்யும்படி அசைன்மென்ட் கொடுத்துள்ளாராம்.
ஏற்கனவே மழை காலத்தை தொடங்கியதால் எங்கும் மழை நீர் தேங்காதபடி வேலைகளை தமிழக அரசு செய்துள்ளது என கூறியது. ஆனால் நேற்று காலையில் இருந்து சென்னையின் பல பகுதியில் மாலை பொலிந்து நீர் வெளியே செல்லமுடியாமல், தேங்கி நிற்பதால் அதனை அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் இப்போது அண்ணாமலை காதில் இந்த செய்தி பட பாஜக நிர்வாகிகள் இதில் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளாராம். போற இடத்தில் எல்லாம் கன்னி வெடி இருப்பது போன்று அண்ணாமலை எல்லா விஷயத்திலும் கூர்மையாக ஆராய்ந்து மக்களிடம் மாற்றத்தை கொண்டு வர முனைப்புடன் செய்லபடுகிறார் என கூறப்படுகிறது. மேலும், ஆளும் திமுக மழை நீர் தேங்காமல் கண்காணித்து வந்தாலும் சென்னையில் உள்ள பல சாலைகளில் நீர் தேங்கி நிற்கிறது இதனால் டெங்கு காய்ச்சல் பரவுவதால் அரசின் நடவடிக்கை எந்த அளவில் உள்ளது என்று வேறு கண்காணிக்க உத்தரவிட்டுள்ளாராம் என்ற பல தகவல்கள் கசிந்துள்ளன.