கடந்த 27ஆம் தேதி காலை எட்டு முப்பது மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மெல்ல மேற்கு திசையில் நகர்ந்து 28ஆம் தேதி காலை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்தது. இந்த வானிலையின் மாற்றம் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலிமையானது, தற்போது அந்த வலிமையான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெல்ல நகர்ந்து கரைக்கு வர துவங்கியிருப்பதாக தகவல்கள் வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் இது குறித்து வானிலை அறிக்கை தகவல்கள் கூறும் பொழுது இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும், இதன் காரணமாக தமிழகத்தின் கடற்கரை ஓர மாவட்டங்களில் வலுவான மழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கை கூறுகிறது. மேலும் இது குறித்து அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளதாவது திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பாண்டிச்சேரி, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி என ஒட்டுமொத்த கடலோர மாவட்டங்களும் கனமழை எதிர்பார்க்கக்கூடும் எனவும் இந்த மழையானது விட்டு விட்டு பிரியாமல் தொடர்ச்சியாக பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று ஒரு நாள் பெய்த மழைக்கு சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வாகனங்கள் நகர முடியாமல் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அதிகமாக அங்கேயே நின்றன. எனினும் இது குறித்து இணையத்தில் கமெண்ட்கள் பறக்கின்றன, டிசம்பர் என்றாலே அந்த வருடத்தின் முடிவு, இதுபோன்ற இயற்கைக்கு எதிரான காரியங்கள் தான் நடக்கும், டிசம்பரில் தான் சுனாமி வந்தது, டிசம்பரில் தான் கஜா புயல் அடித்தது, டிசம்பரில் தான் இன்னும் பல புயல்கள் புயல் அடித்தது.
இதுபோன்ற டிசம்பரில் தான் பல புயல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் வரும், டிசம்பர் என்றாலே எல்லோரும் சற்று பயத்துடனே இருக்க வேண்டிய நிலைமை வரும், ஆனால் டிசம்பர் மாதம் இன்னும் பிறக்கவே இல்லை நாளை தான் பிறக்கிறது அதுக்குள்ள டிசம்பர் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டதா என இணையத்தில் கமெண்ட்டுகள் பறக்கின்றன.
மேலும் டிசம்பர் மாதம் முதல் வாரம் வரை தமிழகத்தின் சில இடங்களில் மழை இருக்கும் எனவும் இந்த 2023 ஆம் ஆண்டு முடியும் பொழுது சில இடங்களில் சில பாதிப்புகள் இருக்க கூடும் எனவும் ஜோதிடர்கள் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது. 'டிசம்பர் தன் வேலையை காட்ட ஆரம்பித்தார்' என்ற ஜாலி காமெண்டுகளும் இணையத்தில் தெறிக்க விடுகின்றனர். இது மட்டும் அல்லாமல் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலே இப்படி அறிகுறி காண்பிக்கிறதே டிசம்பர் மாதம் ஆரம்பித்தவுடன் என்ன நடக்கப் போகிறதோ எனவும் வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இது மட்டுமல்லாமல் சென்னையில் இந்த ஆண்டு தண்ணீர் தேங்காது எப்படி காப்பாற்றி விட்டோம் பார்த்தீர்களா? என ஆளும் திமுக அரசு தரப்பில் திமுக ஆதரவாளர்கள் கூறியிருந்தாலும் அவர்கள் வார்த்தையை பொய்யாக்கும் வகையில் தற்பொழுது சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி, பல இடங்களில் தண்ணீர் வடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேயர் பிரியா இரவில் இருந்து பல இடங்களில் நேரடி ஆய்வு செய்து வருகிறார்.