அதிமுகவில் இருக்கும் அமைச்சர்களின் ஊழல் பட்டியல் தயார் நிலையில் உள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறி சமீபத்தில் திமுகவின் முக்கிய அமைச்சர்களுடைய சொத்து பட்டியலை பொது வெளியில் வெளியிட்டார். இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“பாஜக தலைவர் அண்ணாமலை முதலில் அதிமுகவின் ஊழல் குறித்து பேசியிருக்க வேண்டும். ஊட்டியில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு குறித்து பேசியிருக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் சுமார் ரூ. 46,000 கோடி ஊழல் நடைபெற்றதற்கான பட்டியலை நாங்கள் விரைவில் வெளியிடுவோம்”.
இந்த ஊழல் பட்டியலை ஓபிஎஸ் அனுமதியோடு நானும், பிரபாகரனும் விரைவில் வெளியிடுவோம். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பார்த்து நான் ஒரு கேள்வி கேட்க்கிறேன். நீங்கள் தற்போது தான் கட்சிக்கு வந்திருக்கிறீர்கள். தமிழகத்தில் நடைபெற்ற ஊழலை கண்டுபிடித்திருக்கிறிர்கள். அதை நான் வரவேற்கிறேன். சுமார் ரூ.4800 கோடி அளவிற்கு எடப்பாடி பழனிச்சாமி ஊழல் ஈடுபட்டிருக்கிறார் என சிபிஐ விசாரனை மேற்கொள்ளுதே அதை பற்றி ஏன் அண்ணாமலை பேசவில்லை.
“தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ரூ.46,000 கோடிக்கு மேலாக ஊழல் நடந்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை??? என திமுகவை பார்த்து அண்ணாமலை கேள்வி எழுப்பிருக்க வேண்டும் என்றார்”.
மேலும் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த 4 வருடங்களில் அதிக அளவிலான ஊழல் நடந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில், அதுவும் இபிஎஸ் தலைமையில் தான் அதிகப்படியான் ஊழல் நடந்து இருக்கிறது. அண்ணாமலை கவலைபடாமல் ஊழலை எதிர்த்து போராடுங்கள். மிகப்பெரிய அளவில் ஊழல் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமியை ஏன் தமிழக அரசு கைது செய்யாமல் இருக்கிறார்கள் என மு.க.ஸ்டாலினிடம் கேள்வி கேளுங்கள்.
“அதிமுக பொதுச்செய்லாளர் எடப்பாடி பழனிச்சாமி ஊழல் தொடர்பாக சிறை செல்வது உறுதியாகியுள்ளது. அவர் கம்பி என்னும் நாள் நேருங்கி விட்டது. இந்த பயத்தினால் தான் இபிஎஸ், அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து அடக்கப்பார்க்கிறார். ஆனால் என்னை பொருத்தவரை இபிஎஸ்ஸை சிறைக்கு அனுப்பாமல் அண்ணாமலை விடவே மாட்டார் என கூறினார்”.
மேலும், “கடந்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ஊழலில் தொடர்புடைய அமைச்சர்களின் பட்டியல், புள்ளி விவரங்களுடன் எங்களிடம் தயார் நிலையில் உள்ளதாகவும், அதை ஓபிஎஸ் அனுமதியுடன் நாங்கள் விரைவில் வெளியிட போகிறோம் என ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி புதிய புழலை கிளப்பிள்ளார்”.