“ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அண்ணாமலை புது இலக்கணம் என அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்”.
தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில தினங்களுக்கு முன் திமுகவின் முக்கிய அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டிருந்தார். இது தமிழக மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி திமுவினரின் உண்மை முகத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது.
அண்ணாமலை திமுகவினரின் ஊழல் பட்டியலை மட்டுமின்றிதமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சியினரின் ஊழல் பட்டியலையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன் என்று தெரிவித்தது அதிமுக கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியது. அதிமுகவுடன், பாஜக கூட்டணி வைத்திருந்தாலும் அண்ணாமலை தெரிவித்தது அனைவரின் பார்வையும் அவர் பக்கம் திரும்பின. இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவின் தலைவர்கள் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“இதுகுறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை குறித்து இனிமேல் என்னிடம் எந்த ஒரு கேள்வியையும் கேட்காதிர்கள். அவர் இப்படியே பேசி பேசித்தான் தமிழகத்தில் பெரிய ஆளாகிறார். நான் சுமார் 50 ஆண்டுகளாக அரசியலில் பயணிக்கிறேன். எந்தவொரு கட்சியை பற்றி வேண்டாலும் கேளுங்கள். ஆனால் அண்ணாமலை பற்றி மட்டும் என்னிடம் கேள்வி கேட்காதிர்கள் என்றார்.
மேலும் அரசியல் கட்சியில் இருப்பவர்களுக்கு அடிப்படை தன்மை தெரிந்திருக்க வேண்டும். அண்ணாமலைக்கு அது கிடையாது. அவர் எதையாவது பேசிகிறார். பின்பு எங்களை போன்ற தலைவர்களிடம் ஊடகங்கள் அவரை பற்றி கேள்வி எழுப்புகின்றனர். தயவு செய்து அண்ணாமலை பற்றி என்னிடம் கேள்வி கேட்காதிர்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக தெரிவித்திருந்தார்”.
“இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் தலைவர் அண்ணாமலை ஒரு புது இலக்கணம் என்றார்”.
மேலும் ‘அடுத்தவரின் காலின் விழுந்து, பதவி பெற்று கொடுத்தவரின் காலையே வாரும் கலையை கற்றவர்களுக்கு, இது போன்ற புதிய அரசியல் இலக்கணம் தெரிந்திருக்க துளியளவும் வாய்ப்பில்லை பாவம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மறைமுகமாக விமர்சித்துள்ளார்’.