‘கலைஞர் கருணாநிதி குடும்பத்தின் சொத்துப்பட்டியலை வைத்து திமுகவை விமர்சித்து பேசியுள்ளார் எச்.ராஜா’.காசி தமிழ் சங்கத்தை போலவே குஜராத்தில் சவுராஷ்டிரா தமிழ் சங்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக மதுரையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதில் பயணம் செய்த பொதுமக்களுக்கு பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா இனிப்புகளை வழங்கி வழியனுப்பி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசியதாவது:
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் திமுகவினரின் சொத்துப்பட்டியலை வெளியிட்டுள்ளார். இது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. அவர் வெளியிட்ட சொத்து பட்டியலில் இருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி போன்ற 17 நபர்களும், சொத்துபட்டியல் எங்களது இல்லை. அதற்கும் எங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என சொல்லியிருக்க வேண்டியது தானே.
“சம்மந்தப்பட்ட நபர்கள் சொத்துபட்டியல் குறித்து வாய் திரக்காதது ஏன்??? திமுகவினருக்கு அதில் என்ன அச்சம். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தவறான தகவல்களை வெளியிட்டு இருந்தால், திமுகவினர் நீதிமன்றத்தை நாட வேண்டியது தானே??? என்று பல்வேறு கேள்விளை எழுப்பினார்”.
மேலும் “ரயில்களில் டிக்கெட் எடுக்க கூட பணம் இல்லாமல் பயணித்தவர் கலைஞர் கருணாநிதி. பின்பு சினிமா துறையில் கதை எழுதி பணம் சம்பாதித்தார். அப்படிப்பட்ட கருணாநிதியின் குடும்பத்தினருக்கு எப்படி இத்தனை லட்சம் கோடி சொத்து வந்தது. இந்த கேள்வியை தான் தலைவர் அண்ணாமலை கேட்கிறார். இந்த சொத்து பட்டியலுக்கும் எங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று அவர்கள் சொல்லியிருக்கலாம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளது திமுகவினரின் சொத்து பட்டியல் மட்டுமே. அவர்களுடைய ஊழல் பட்டியல் கிடையாது. அவர் வெளியிட்ட சொத்துப்பட்டியலை ஆய்வு செய்யுங்கள். அதில் ஏதேனும் ஆட்சயபனை இருந்தால் அதை அண்ணாமலையிடமே கேளுங்கள் என்றார்.
மேலும் “தமிழகத்தில் திமுகவினருக்கு ஊழலின் மூலமாக தான் இவ்வளவு பணம் வந்தது. திமுகவினரின் ஆட்சியில் கரும்பு ஒன்றுக்கு ரூ.13 என்ற அடிப்படையில் திருடிய அரசு திமுக என்று நான் ஏற்கனவே நிறுப்பித்துள்ளேன். இதுபோன்று தமிழகத்தில் அதிகப்படியான உழலை செய்து தான் இத்தனை கோடி சம்பாதித்து இருக்கிறார்கள் என்று திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்”.