24 special

இர்பான் மன உளைச்சலுக்கு மருந்து அளித்த..! தமிழக ஆளுநர் ஆர் .என் .ரவி

En Ravi, irfan
En Ravi, irfan

இர்ஃபானை பெரிதும் மதிப்பளித்து விருந்து வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி!முன்பெல்லாம் எங்கேயாவது சினிமா பிரபலங்களை பார்த்தால் தான் மக்கள் ஆரவாரத்துடன் கூட்டம் கூட்டமாக கூடி சென்று அவர்களிடம் ஆட்டோகிராப் அல்லது போட்டோ எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர் ஆனால் தற்போது சினிமா பிரபலங்களுக்கு இணையாக யூடியூப் பிரபலங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றனர்.


அந்த வகையில் தமிழகத்தில் youtube சேனல் மூலம் பிரபலமாகி சில தினங்களுக்கு முன்பு திருமணம் ஆகியவர் தான் இர்பான். இவர் பல்வேறு ஊர்களுக்கு சென்று பல்வேறு வகையான உணவுகளை உண்டு அதனை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளார் மற்றும் 35 லட்சம் சப்ஸ்க்ரைபர்களையும் தனது YouTube சேனல் மூலம் பெற்றுள்ளார். பிறகு பிரபல அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களுடன் ஃபுட் சேலஞ் செய்து இவர் வெளியிட்ட வீடியோ மக்கள் மத்தியில் இன்னும் அதிக வரவேற்பு பெற்று கொடுத்தது.

இந்த நிலையில் தான் இவருடைய திருமணம் மே 14ஆம் தேதி நடைபெற்றது இந்த திருமணத்திற்காக பல அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார்! பிரம்மாண்டமாக நடைபெற்ற இவரது திருமணம் இணையதளத்தை தற்போது கலக்கி வருகிறது.

இப்படி பிரம்மாண்டமாக நடைபெற்று அந்த திருமணத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதற்கு இர்பான் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் . தொடர் விமர்சனங்களையும் செய்து வருகின்றனர். அவருடைய சொந்த சமூகத்தினர் இது நமது மார்க்கத்திற்கு எதிரானது, நமது மார்க்கத்துக்கே கூடாத விஷயம் என தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இப்படி தமது சொந்த சமூகத்தினரே விமர்சனங்களை செய்து வருகின்றனர் என்று மனது உடைந்து போன இப்ரானிற்கு விருந்த அழைப்பிதழ் கொடுத்து ஆளுநர் ஆர்.என். ரவி அசத்தியுள்ளார்.

திருமணத்திற்கு முன்பாகவே திருமண அழைப்பிதழை ஆளுநருக்கு இர்பானின் வழங்கியிருக்கிறார் ஆனால் ஆளுநரின் பணிச்சுமை அதிகமானதால் அவரால் திருமணத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது, இருப்பினும் இர்பானின் திருமணம் முடிந்த அடுத்த வேலையாக தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்துள்ளார்.
மேலும் ஆளுநர் ஆர். என்.ரவியும் இர்பானின் ரசிகர் என்ற காரணத்தினாலும் அவரை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் ஆளுநரின் அழைப்பை ஏற்று இர்பானின் மனைவி மற்றும் குடும்பத்தார் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் ஆளுநரின் இந்த விருந்து தனக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்தது,  அதில் திகைத்துப் போனதாகவும் இர்பான் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய விருப்பப்படி தன்னுடைய முயற்சியால் மட்டுமே யூட்யூபில் வளர்ச்சி அடைந்து தனது திருமணத்தை நடத்திய இர்பானுக்கு அவரது சொந்த சமூகமே மனது நோகும் படியான பல கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் ஆளுநர் ஆர் என் ரவி திருமணம் முடிந்த கையோடு இர்பானுக்கு விருந்தளித்தது இர்பான் சொந்த சமூகத்தினரால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு மருந்து போடும் வகையில் இருந்துள்ளது. மேலும் இந்த விருது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உற்சாகத்திலும் திளைத்து போய் இருக்கிறேன் என்று இர்பான் தனது நெருங்கிய வட்டாரத்தில் கூறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.