தற்போது பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் பொறுப்பு வகுத்து வருகிறார், ஆனால் இதற்கு முன்பாக பால்வளத்துறை அமைச்சர் ஆக பதவியேற்ற நாசர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கடந்த மே மாதத்தில் பால்வளத்துறை அமைச்சர் என்ற பொறுப்பை இழந்ததோடு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இதற்காக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது, அதில் மிக முக்கியமானதாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த வருடம் அண்ணாமலை சில குற்றச்சாட்டுகளையும் ஆவின் பாலகம் மேற்கொள்ள வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்தும் அவற்றை மேற்கொண்டு இருந்தால் ஆவின் பாலகத்தின் வருவாய் இரட்டிப்பு மடங்கு அதிகரித்திருக்களாம் என அண்ணாமலை முன்வைத்த புகார்களும் இனி அமைச்சர் நாசர் அமைச்சரவை பதவியில் வைத்து ஒரு பிரயோஜனமும் இல்லை என்ற முடிவை திமுக எடுப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என அரசியல் விமர்சகர்கள் கூறினார்கள்.
அதோடு நாசர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார் அந்த பதவிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டார் அதற்குப் பிறகு ஆவின் பாலகத்தில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என அரசு தரப்பில் கூறப்பட்டாலும் சர்ச்சைகள் தொடர்ந்தது.. சிறார்கள் குறித்த சர்ச்சை, சிறார்கள் பணியமர்த்தப்பட்டது பணியமடுத்தப்பட்டவர்களுக்கு போதிய ஊதியம் தராமல் இருந்தது என அடுக்கடுக்கான பிரச்சனைகள் எழுந்தது. அது மட்டுமின்றி பொதுமக்களால் தினசரி வாங்கப்படும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டை நிறுத்தி மற்ற பால்களின் விலையை உயர்த்தியது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது இந்த சமயத்தில் தற்போது தீபாவளிக்கு இன்னும் பத்து நாட்கள் உள்ள நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவின் நிறுவனத்தில் தொடரும் முறைகேடுகள் எனவும் தவறு செய்தவர்களுக்கான தண்டனைகள் சிறிது காலம் தள்ளி போகலாம் ஆனால் தப்பித்து விட முடியாது என்பதை மக்கள் பணத்தை விதவிதமாக திருடும் திமுக கூட்டம் வெகுவிரைவில் உணரும் என ஆவின் பாலகத்தில் நடைபெறும் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு உள்ளார்.
அதாவது திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து ஒவ்வொரு துறையிலும் முறைகேடுகள் வெளிப்படையாக நடைபெற்று வருகிறது அதிலும் குறிப்பாக ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே பால்வளத் துறையின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு இடமாக இருந்ததோடு அளவுக்கு அதிகமான முறைகேடுகளில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு பிறகு மனோ தங்கராஜ் அமைச்சராக பொறுப்பேற்றார் இவருக்கு அவரே பரவாயில்லை என்பது போன்ற அளவில் பால்வளத் துறையின் நிலை தற்போது மிகவும் சீர் குலைந்து உள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
பாலின் கொள்முதல் விலையை உயர்த்தாமல், உற்பத்தியாளர்களை எல்லாம் தனியார் பக்கம் திருப்பி விட்டுவிட்டு ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் அளவை குறைத்த அமைச்சர், அடுத்ததாக பிற மாநிலங்களில் இருந்து அதிக விலைக்கு பால் பவுடர் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய தொடங்கினார் என ஆவின் பாலகத்தில் தற்போது நடைபெற்று வரும் குற்றங்களை பட்டியலிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டனர். கடந்த முறை தீபாவளி நெருங்கும் சமயத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் செய்த முறைகேடுகள் ஆவின் பாலகத்தில் நடந்த குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதனால் நாசர் பதவியும் பறிக்கப்பட்டது தற்பொழுது இந்த முறையும் தீபாவளியில் நெருங்கும் சமயத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் மீதும் ஆவின் பால் அமைச்சகத்தின் மீதும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் இதனால் இவர் மீதும் குறி வைத்து விட்டார்கள் திமுக அமைச்சரவையில் எனவும் இவரும் விரைவில் மாற்றப்படுவார் எனவும் சில தகவல்கள் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.