Cinema

பாஜக கட்சியில் இணையும் பிரபல தமிழ் நடிகர்?.....பக்கா பிளான் போட்டு தூக்கும் பாஜக தலைமை!

Sivakarthikeyan,amitsha
Sivakarthikeyan,amitsha

சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள், நடிகைகள் அரசியலில் இணைந்து செயல்படுவது வழக்கமான ஒன்று, தங்கள் படத்திற்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் கட்சிகள் பார்த்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் அரசியலில் களம்காணுவார்கள்.



அரசியலில் இருக்கும் பெரும் புள்ளிகள் யாராக இருந்தாலும் தங்களு கட்சியின் வளர்ச்சிக்காக அந்தஸ்தில் இருப்பவர்கள் முதல் பாமர மக்கள் வரை இணைத்துக்கொள்வது வழக்கம். அந்த வகையில் இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் அவர் மீது அரசியல் வலை போடப்பட்டுள்ளது.


ஆரம்ப காலகட்டத்தில் விஜய் டிவியின் மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன், முதலில் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருந்த அவர்  பிறகு அவரது திறமையயை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக மாஸ் எண்டரி கொடுத்தார். 


மெரினா படத்தின் மூலம் திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் நகைச்சுவையாக நடிக ஆரம்பித்து, அதன் பிறகு தனுஷ் உடன் ஒரு படத்திலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். ஆரம்பத்தில் இருந்து குறைவான உயரத்தில் பறக்க தொடங்கினாலும், இப்பொது பான் மடங்கு உயரம் சென்றுள்ளார். ஆரம்பத்தில் ஆயிரத்தில், லட்சத்தில் சம்பளம் பெற்று வந்த சிவகார்த்திகேயன் இப்போது கோடி கணக்கில் பெற்று வருகிறார். இவருக்கென்று ரசிகர்கள் பட்டாளமே உருவாக்கியுள்ளார். 


இவரின் வளர்ச்சி நாளடைவில் அரசியல் தலைவர்களின் பக்கம் சென்றது. விஜய் போன்றோர்கள் அரசியல் வரமாட்டேன் என்று சொல்லி கொண்டு இருந்தார். அனால் அவரின் படத்திற்கு ஏற்ப்பட்ட பிரச்சனைகளின் காரணமாக அவர் அரசியலின் உள்ளே செல்லும் நேரம் வந்தது இப்போது அது அதிகாரபூர்வமாக மாறியுள்ளது. அதேபோல் தான் சிவகார்த்திகேயனுக்கும் அந்த நெருக்கடியான சூழல் வந்துள்ளது. 


சிவகார்த்திகேயன் பற்றிய பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் தற்போது சமூக வளைத்ததில் பரவி வருகிறது. இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் அயலான் படம் 5 ஆண்டுகளுக்கு முன்னரே திரைக்கு வர இருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் படம் தள்ளிப்போனது. ஆனாலும், இந்த அயலான் படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் மீது ஏற்படும் பிரச்சனை காரணமாக அயலான் படம் எதிர்பார்த்த வசூல் எடுக்காம என்று இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கவலையில் உள்ளனர். 


பொங்கலுக்கு ரஜினியின் படமும், அரண்மனை படமும் வெளியாகவுள்ளதால், அயலான் படம் வேறு நாட்களில் வெளியிடலாமா என்று யோசித்து வருகின்றனர் படக்குழு. இந்த நிலையில் சிவகார்த்திகேயனை பாரதிய ஜனதா கட்சியில் சேர்க்க பக்காவான பிளான் போடுவதாக தெரிகிறது.


பாஜக முக்கிய நிர்வாகி ஒருவர் சிவகார்த்திகேயனை அணுகி, தமிழ் சினிமாவில் உங்களுக்கு எதிர்க்க ஒரு குழு நடந்து கொண்டு இருக்கிறது. தனி மனிதராக நின்று என்ன செய்ய போகிறீர்கள் உடனே ஓகே சொல்லுங்கள். அமித்ஷா முன்னிலையில் நீங்கள் சேர ஏற்பாடு செய்கிறேன் என்றாராம். இருந்தாலும் இப்போவே அரசியலில் சேரனும் என்று யோசித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இருப்பினும் அயலான் வெளியிடும் நேரத்தில் எதாவது பிரச்சனை ஏற்பட்டால் உங்களை நிச்சயம் அணுகுவேன் என்று கூறியுள்ளாராம். 


எனவே, கூடிய விரைவில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவார் சிவகார்த்திகேயன் என்று தெரிகிறது. பாஜகவில் இவர் இணைந்து விட்டால் இவருக்கு ஒரு பொறுப்பும் கொடுக்க பாஜக தலைமை ஓகே சொல்லிவிட்டார்களாம். இப்போதைக்கு பாஜகவில் சிவகார்த்திகேயன் இணைவது மட்டும் தான் பேலன்ஸ் என்று கூறப்படுகிறது.