24 special

புதியவர்களை வரவேற்கிறேன்: விஜய் குறித்து அண்ணாமலை ஓபன் டாக்!

Annamalai, actor vijay
Annamalai, actor vijay

லியோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் 2026ல் கப்பு முக்கியம் பிகிலு என் பேசியது விஜய் அரசியலுக்கு வருவதை மறைமுகமாக உறுதி செய்துள்ளார் என்று கூறப்பட்டு வரும் வேலையில் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இது குறித்து கேட்ட பதில் என்னவென்றால்,



நடிகர் விஜய் நடித்த படம் லியோ பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் கடந்த மாதம் 19ம் தேதி திரைக்கு வந்தது. படம் வெளியாகி 12 நாட்களில் 540 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வெற்றி விழா ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஜய்.


விஜய் அரசியலுக்கு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், விஜய் தன் வாய்மொழியால் இதுவரை எங்கும் உறுதிப்படுத்தவில்லை. ஆகையால் விஜய் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உற்று நோக்கும் விதமாக பார்க்கப்படுகிறது. நேற்று பேசிய விஜய் தான் அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்திவிட்டர் இதனால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


லியோ படம் வெற்றி விழாவில் நடிகர் விஜய், நான் ரெடி தான் பாடலுக்கு எழுந்த சர்ச்சையை விளக்கி பேச தொடங்கினார். சினிமாவில் புரட்சி தலைவர், நடிகர் திலகம், உலக நாயகன், சூப்பர் ஸ்டார், தல என ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டம் உள்ளது. தளபதி யாருனு உங்களுக்கு தெரியும் ‛‛மக்கள் தான் மன்னர்கள், நான் உங்கள் தளபதி, நீங்கள் ஆணையிட்டால் நான் செய்யத்தயார். இந்த பட்டம் என்பது அவர்களுக்கு உரியது. 


தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளர் 2026 குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு விஜய் 2026 என்ன கிரிக்கெட் ஆஹா என்று மழுப்பலாக பதில் சொன்னார். அதன் பிறகு ரசிகர்களை பார்த்து, 'கப்பு முக்கியம் பிகிலு' என்று கூறினார். இதனால் அரங்கமே அதிர்ந்தது. விஜய் அரசியல் வருவதை தான் இப்படி மறைமுகமாக பேசினார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் விஜய் அரசியல் வருவது குறித்து கேட்டதற்கு, "நான் யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்பேன் என்று முதலில் சொல்லிவிட்டேன். காரணம் மக்களை மேம்படுத்துவதற்காக யார் வேண்டும் என்றாலும் வரலாம். மக்களிடம் அவர்களின் கருத்துகளைக் கூறட்டும், மக்கள் தேர்ந்தெடுக்கட்டும்.


எனவே, யார் அரசியலுக்கு வருவதற்கும் யாரும் தடையாக இருக்கக்கூடாது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உரிமை உள்ளது..மூன்று கட்சிகள் இருக்கும் இடத்தில் ஆறு கட்சிகள் இருப்பது நல்லதுதான். அதிலிருந்து தங்களுக்குப் பிடித்தவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.


அதுவும் புதியவர்கள் அரசியலுக்கு வரும்போதுதான், இங்கிருக்கக்கூடிய அரசியல் நடைமுறைகள் அதிர்வுறும். புதியவர்கள் வரும்போதுதான் சிஸ்டம் மாறும். பழைய கட்சிகளே 30 ஆண்டுகள், 40 ஆண்டுகள் திரும்பத்திரும்ப ஆட்சிக்கு வந்தால், அது தேங்கிய நிலையாகிவிடும். அதனால்தான் நீரோடைப் போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.


நடிகர் விஜய் உட்பட நிறைய புதியவர்கள் அரசியலுக்கு வரட்டும். அவர்கள் தங்களது மாற்று அரசியல் கருத்துகளை மக்களிடம் தெரிவிக்கட்டும். இறுதியில் தமிழக மக்கள் முடிவு என்ன எடுக்கிறார்களோ, அதை ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார்.