24 special

அண்ணாமலை நீ இலங்கைக்கு கிளம்பு..."இதை மட்டும் செய்"... மாஸ் காட்டும் மோடி!

Modi,  annamalai
Modi, annamalai

பிரதமர் மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் இவர் தொடர்ச்சியாக சீனாவிற்கு எதிராக இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளை இந்தியா பக்கம் கொண்டுவர முயற்சி செய்து வருகிறார்.


அந்த வகையில் இலங்கை இந்தியாவிற்கு மிகவும் முக்கியம் என்பதால் தொடர்ச்சியாக இலங்கை விவாகரத்தில் இந்தியா கவனமாக காய்களை நகர்த்தி வருகிறது, மேலும் தற்போது இந்தியா பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து இருக்கிறதாம். இலங்கையில் உள்ள தமிழர்கள் கலாசார ரீதியாக இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் மேலும் இந்து மதத்தை பின்பற்றி வருகின்றனர்.

இந்த சூழலில் அவர்களுக்கு இலங்கையில் இதுநாள் வரை போதிய சட்ட உரிமைகள் மறுக்க பட்டு வருவதும் அதனை பெரும்பான்மை சமூகமான சிங்கள சமூகம் மறுத்து இருப்பதையும் பிரதமர் மோடி பலமுறை சுட்டி காட்டி வந்து இருக்கிறார். இந்த சூழலில் கடந்த 4 முறையாக இலங்கை பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் இலங்கை அரசிடம் தமிழர்களுக்கு உரிமை வழங்கும் 13 வது சட்ட திருத்தத்தை உடனே நடைமுறை படுத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்து இருக்கிறார் ஆனால் இதற்கு இலங்கை சம்மதிக்கவில்லை.

இந்த சூழலில் இலங்கையில் வசிக்கும் மலையக மற்றும் வடகிழக்கு தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாமல் இருப்பதே இலங்கை அரசிற்கு சாதகமான சூழலை உண்டாக்க காரணமாக பார்க்க படுகிறது.

இதை முறியடிக்கும் வண்ணமும் இலங்கை தமிழர்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தி நிர்வாக ரீதியாக அழுத்தம் கொடுக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் முருகன் இருவரையும் இலங்கைக்கு அனுப்ப பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்து இருக்கிறாராம்.

இந்த சூழலில் நிலைமையை உணர்ந்த பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அமைச்சர் முருகன் இருவரும் சென்னையில் இருந்து நேரடியாக புதிய விமான நிலையம் சென்று இலங்கை களத்திற்கு செல்ல இருக்கிறார்களாம்.

இது இருநாட்டு மக்கள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது பாஜக தமிழர்களுக்கு எதிரான கட்சி என தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் குற்றம் சுமத்தி வரும் சூழலில் இலங்கை தமிழர்களுக்காக பாஜக மாநில தலைவரும் அமைச்சரும் இலங்கை செல்வது உண்மையில் தமிழர்களுக்கு ஆதரவான கட்சி யார் என்பதை உணர்த்தி இருப்பதாக மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி இருக்கிறது