24 special

என்னப்பா இது ...தயாநிதி பேசுறது கேட்காம வெளியே போனா எப்படி... மனசு ஒரே பேஜாரா போன சம்பவம்!

Dhayanithi maran
Dhayanithi maran

நாடாளுமன்ற கூட்ட தொடர் தொடங்கினால் ஒரு புறம் விவாதங்கள் மறு புறம் பதில் என பரபரப்பாக செல்லும் அதே போல் இந்த ஆண்டும் கூட்ட தொடர் சுறு சுறுப்பாக சென்றது முதலில் எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைக்க அதற்கு பதிலை ஆளும் பாஜக அமைச்சர்கள் கொடுத்து வந்தார்கள்.


இது ஒருபுறம் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி இருக்கும் ஆனால் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நாடாளுமன்ற வாசலில் பத்திரிகையாளர்களை சந்தித்து புலம்பிய சம்பவமும் பெரிய அளவில் தமிழகத்தில் வைரலாகவில்லை, பிரதமர் மோடி பேசி முடித்ததும் யாருமே அவையில் இல்லை நான் பேச எழுந்த போது குறைந்த பட்ச உறுப்பினர்கள் 10% பேர் கூட இல்லை ஆளும் கட்சியினர் சென்று விட்டார்கள்... நான் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து இருக்கிறேன் இப்படி ஒரு முறை கூட நடந்தது இல்லை நாங்கள் எதிர்க்கட்சிகள் என்ன செய்வது ஒரே வருத்தமாக இருக்கிறது என புலம்பி தள்ளி இருக்கிறார் தயாநிதி மாறன்.

இது ஒருபுறம் என்றால் தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகள் ஏன் தாமதம் ஆகிறது என கேள்வி எழுப்பி இருந்தார் தயாநிதி மாறன் அதற்கு விரைவில் பணிகள் முடிந்து விடும் என பாஜக அமைச்சர்கள் பதில் கொடுப்பார்கள் என எதிர்பார்த்து இருந்து இருப்பார் தயாநிதி மாறன்.

ஆனால் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி எழுந்து முதலில் சாலை அமைக்க இடம் தேர்வு செய்து கொடுத்தால்தானே சாலை பணிகளை முடிக்க முடியும், மேலும் பல பணிகளுக்கு மாநில அரசு துறைகள் ஒப்புதல் அளிக்க வில்லை,இதே போல் பணிகளை மேற்கொண்ட பெங்களூர் - மைசூர் பணிகள் முடிவு அடைந்து விட்டது முதலில் மாநில அரசு பணிகளை பாருங்கள் என பதிலடி கொடுத்து இருக்கிறார் இந்த பதிலடி உடனடியாக கிடைக்கும் என தயாநிதி மாறன் தரப்பு எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள்.

நாடாளுமன்றம் போகும் முன்பு விமானத்தில் அவசர கதவை திறக்காமல் இருப்பது எப்படி என பாடம் எடுத்த தயாநிதி மாறானுக்கு, நாடாளுமன்றம் உள்ளே வைத்து சாலை அமைக்க முதலில் இடத்தை தேர்வு செய்து கொடுப்பது மாநில அரசு பணி என பாடம் நடத்திவிட்டார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி.