24 special

அய்யய்யோ... 2 G ஊழல் விவகாரத்தை மோடி இன்னும் மறக்கலையா..? டென்ஷனில் ராசா மற்றும் கனிமொழி!

Modi,  kanimozhi
Modi, kanimozhi

நாடாளுமன்ற கூட்ட தொடர் தொடங்க போகிறது என்றாலே  இந்தியா முழுவதும் மிக பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி விடும் ஏதேனும் புதிய சட்டம் அல்லது பழைய சட்டத்தை நீக்க போகிறார்களா? என நாடே எதிர்பார்பில் இருக்கும்.. இதே போன்றே எதிர் கட்சிகள் பேச்சிற்கு பிரதமர் நரேந்திர மோடி என்ன பதில் கொடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்படும்.


அந்த வகையில் பிரதமர் மோடியின் நேற்றைய பேச்சு மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது, எதிர் கட்சிகள் அதாணி விவகாரம் குறித்து அவயை முடக்கினர், அதே நேரத்தில் திமுக சார்பில் கனிமொழி போன்றவர்கள் சமூக நீதி சமத்துவம் என்று பேசிய நிலையில் அதானி விவகாரம் தொடர்பாக விளக்கம் கொடுக்க வேண்டும் என்று கேட்டனர்.

இந்த சூழலில் தான் குடியரசு தலைவர் உரையின் மீதான பதிலுரையில் பேசிய பிரதமர் மோடி, ராகுல் காந்தி, ஊடகங்கள் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார் இது ஒருபுறம் என்றால் பிரதமர் மோடி அவையில் குறிப்பிட்ட ஒற்றை வார்த்தை மிக பெரிய அதிர்ச்சியை திமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி மற்றும் ராசாவிற்கு கொடுத்து இருக்கிறது.

ஊழல் குறித்து இவர்கள் பேசுகிறார்கள் 2 ஜி ஊழலை மறந்து விட்டீர்களா? காமென்வெல்த் ஊழல் மூலம் நமது வீரர்களை முடக்கியது ஞாபகம் இல்லையா? கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா ஊழலில் இருந்திங்க விடுபட்டு இருக்கிறது இது உங்களுக்கு தெரியாதா என பிரதமர் மோடி பொறிந்து தள்ளிவிட்டார்.

பெரும் பாலும் பிரதமரின் நாடாளுமன்ற பேச்சுக்களை கூர்ந்து கவனித்தவர்களுக்கு மட்டுமே ஒன்று தெரியும் மிக முக்கிய கருத்துக்களை மட்டுமே நாடாளுமன்றத்தில் பிரதமர் பேசுவார் அப்படி இருக்கையில் மீண்டும் 2ஜி வழக்கை சிபிஐ தூசி தட்டிய நிலையில் பிரதமர் மோடியும் நாடாளுமன்றதில் 2ஜி ஊழல் குறித்து பேசியது மிக பெரிய பதற்றத்தை கனிமொழி மற்றும் ராசாவிற்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமரின் மேலும் சில பேச்சுக்கள் ஒட்டுமொத்த எதிர் கட்சிகளுக்கும் கிழியை கொடுத்து இருக்கிறது, மோடி மீதான மக்களின் நம்பிக்கை ஊடகங்களின் தலைப்பு செய்திகளில் வந்தது இல்லை எனது உழைப்பால் நாட்டு மக்களின் நம்பிக்கையால் வந்தது என மோடி குறிப்பிட்ட போது எதிர் கட்சிகள் சற்று கலக்கத்தில் இருந்தது தெளிவாக தெரிந்து இருக்கிறது.

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக ஆ ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சூழலில் அந்த வழக்கும் விரைவில் விஸ்வரூபம் எடுக்கும் என்று கூறப்படுவதால் அடுத்து என்ன ஆக போகிறதோ என இயல்பான கலக்கம் திமுக தொண்டர்கள் இடையேயும் உண்டாகி இருக்கிறதாம்.