கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திடீர் பொதுக்கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் பாஜகவின் மாநில தலைமை தொடர் விமர்சனங்களை அதிமுகவுக்கு எதிராக முன்வைத்து வருவதால் அதிமுக இன்று முதல் பாஜகவில் இருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்வதாக தீர்மானத்தை நிறைவேற்றியது. அதோடு அதிகாரப்பூர்வமாக அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக தரப்பில் அறிவிப்பு வெளியானது. இதற்கு முக்கிய காரணமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உத்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிமுக 20க்கு 20 என்ற தொகுதிகளில் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாகவும் அதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்ததாகவும், அதோடு அதிமுக தரப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிஞர் அண்ணா குறித்தும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை குறித்தும் பேசிய கருத்துக்களுக்கு பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்க வேண்டும் என்று கோரிக்கையை அதிமுக தரப்பில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவிடம் முன் வைத்துள்ளதாக கூறப்பட்டது.
அதற்கு பாஜக தேசிய தலைமை மறுப்பு தெரிவித்தாலே அதிமுக இந்த திடீர் முடிவை எடுத்து பொதுவெளியில் அறிவித்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.இதற்கிடையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதையும் தனித்துப் போட்டியிட்டால் நம்மால் பெரும்பான்மையான தொகுதிகளை பிடிக்க முடியும் என்பதை பாஜக தேசிய தலைமையிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூட அதிமுக பாஜகவில் இருந்து விலகி விட்டது இனி 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் யாருக்கான தேர்தல் எந்த இருக்கட்சிக்கு மோதல் ஏற்படும் என்ற கேள்விகளை பத்திரிகையாளர்கள் அண்ணாமலையிடம் கேட்ட பொழுது, மாநிலத் தலைவர் அண்ணாமலை நாடாளுமன்றத் தேர்தல் போட்டி என்பது பாஜகவிற்கும் திமுகவிற்கும் மட்டுமே என உறுதியாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி அதிமுக பாஜகவில் இருந்து விலகியதால் திமுகவின் கூட்டணி கட்சிகள் சில அதிமுக பக்கம் சாய்வதற்கான நேரத்தை பார்த்துக் கொண்டு வந்தது.
இதனை அறிந்த அறிவாலயமும் தன் கூட்டணி கட்சிகளை தன்னிடம் வைத்துக் கொள்வதற்கு பல சலுகைகளை தொகுதி ஒதுக்ககீட்டில் வழங்கியதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இருப்பினும் தற்போது எப்பொழுதும் திமுகவிற்கு ஆதரவாக திமுக பக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எஸ் டி பி ஐ கட்சி ஜனவரி 7ஆம் தேதி மதுரையில் மதசார்பின்மை பாதுகாப்பு மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. அந்த மாநாட்டிற்கான அழைப்பிதழை அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியுள்ளது. இதன் பின்னணி குறித்து விசாரிக்கும் பொழுது அண்ணாமலை திமுகவை தனிமரம் ஆக்க வேண்டும் என்பதற்காக நம்முடன் இருக்கும் அதிமுகவை கூட்டணியில் இருந்து விடுவித்தால் அதிமுக தனித்து இருக்கும் அப்பொழுது திமுகவின் கூட்டணி கட்சிகள் அனைத்தும் அதிமுகவில் இணைந்து விடும் ஏனென்றால் திமுகவுடன் தேர்தலை எதிர்கொண்டால் நிச்சயமாக தோல்வி தான் கிடைக்கும் என்ற கள நிலவரங்கள் திமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு தெரியும், இதன் மூலம் திமுக தனிமரம் ஆகிவிடும் என அண்ணாமலை கணக்கு போட்டார். அந்த கணக்குப்படியே தற்போது நடந்து வருகிறது! திமுகவின் ஆதரவு கட்சிகள் அனைத்தும் அதிமுக பக்கம் செல்கிறது! திமுக தனிமரம் ஆகிறது! கடந்த தேர்தலை போல் 40 தொகுதிகளை திமுக அடிப்பது சிரமம், அண்ணாமலை போட்ட கணக்கு அரசியலில் தற்பொழுது வெற்றி ஆகி வருகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.