24 special

ரஞ்சித் சொன்னது அப்படியே நடந்ததுருச்சு! எல்லை மீறிய ஹாப்பி ஸ்ட்ரீட்!

ranjith, happy street
ranjith, happy street

வாரந்தோறும் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளின் காலைப்பொழுது ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஹேப்பி ஸ்ட்ரீட் எனப்படும் நிகழ்ச்சி தமிழகத்தில் அரசு சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பெரும்பாலான திரளாக கலந்து கொண்டு ஆடி பாடி மகிழ்வர். அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் ஆடல் பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்ற பல நிகழ்ச்சிகளும் நடைபெறும். முதலில் சென்னை கோயம்புத்தூர் போன்ற முக்கிய பெரு நகரங்களில் நடைபெற்ற இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி தற்பொழுது பெரும்பாலான மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது அதிலும் குறிப்பாக மேலை நாடுகளில் இருந்து வந்த இந்த பழக்கம் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் நடிகர் ரஞ்சித் இந்த ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை எதிர்க்கும் வகையில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் . 


அதாவது சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சித், சமீபகாலமாக தமிழகத்தில் ஒரு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் ஒவ்வொரு தெருக்கள் தோறும் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது! இந்த நிகழ்ச்சி நடத்துபவர்கள் பங்கேற்பர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? உங்களின் அம்மா அப்பா யார்! பெண் குழந்தைகளை அரைகுறையுடன் தெருவில் ஆட விடுவதெல்லாம் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சியா? பெரிய மனவேதனையாக இருக்கிறது. இதற்கான அதிகாரம் மட்டும் என்னிடம் இருந்திருந்தால் அனைவருக்கும் ஆயுள் தண்டனை கொடுத்திருப்பேன்!. யாரோ ஒருவருடைய மகன் வேறு ஒருவருடைய மகளுடன் ஆடுவதும் யாரும் ஒரு பெண் வேறு ஒரு ஆணுடன் ஆடுவதும் தான் ஹாப்பி ஸ்ட்ரீட்டா? தங்களின் மன அழுத்தத்தை போக்குவதற்கு இப்படி தெருக்களின் ஒன்றாக சேர்ந்து கூத்தடிப்பது தான் இந்த ஹாப்பி ஸ்ட்ரீட்! இதே நிகழ்வு இன்னும் வருங்காலங்களில் நீடித்தால் தாய்லாந்து சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் போன்று இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி அடுத்த கட்டத்திற்கு சென்று விடும்!

அப்படி ஒரு நிலைமை வரக்கூடாது வரவும் விடமாட்டோம் என்று ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக விமர்சனம் செய்தார். நடிகர் ரஞ்சித்தின் இந்த விமர்சனத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. மொத்தமாக கூறப்போனால் நடிகர் ரஞ்சித்தை விமர்சனங்களாலும் கமெண்ட்களாலும் சில இணையதள வாசிகள் குறிவைத்து தாக்கினர். இந்த நிலையில், சமீபத்தில் புதுவையில் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடந்தது அந்த நிகழ்ச்சியில், டிஜேவால் ஒளிபரப்பப்பட்ட பாடல்களுக்கு ஆடிக்கொண்டிருந்த இளம் பெண்களும் இளைஞர்களும் ஒரு கட்டத்தில் முகம் சுழிக்க வைக்கும் சில செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அதாவது ஒரு பெண் இரு ஆண்களின் தோள்களில் ஏறி அமர்ந்து ஆடியது சுற்றியுள்ள அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. அதுமட்டுமின்றி கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் சிலர் தங்களது கைகளை மட்டும் அசைத்துக் கொண்டு ஆடிக்கொண்டிருந்த நிலையில் மது போதையில் இருந்து சில இளைஞர்கள் தங்களது ஆடைகளை கழற்றியும் வாட்டர் பாட்டில்கள் மற்றும் காலணிகளையும் கழட்டி தூக்கி வீசி உள்ளனர்! 

அதுமட்டுமின்றி சிலர் எல்லை மீறி சுற்றுச்சுவர், ஸ்பீக்கர், மின்கம்பத்திலும் ஏறி ஆடியுள்ளனர்! மேலும் அனுமதி கொடுக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இப்படி முதல்முறையாக புதுச்சேரியில் நடத்தப்பட்ட ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பு கிடைத்ததால் கடந்த வாரம் இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது அதில் இது போன்ற பல சர்ச்சைகளை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதற்காகத்தான் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்று கூறி வருகிறோம் என சமூக வலைதளத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.