24 special

திருவண்ணாமலைக்கும் திருப்பதிக்கும் இடையே உள்ள ஆன்மீக தொடர்பு! இதுவரை வெளி வராத மர்மம்!

thiruvannamalai temple, thirupathi temple
thiruvannamalai temple, thirupathi temple

தமிழ் மாதங்கள் பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான சிறப்புகளை கொண்டது அதற்கு ஏற்றார் போல் தமிழகத்திலும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்பு விழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்று அந்த வகையில் உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக தீபத்துடன் கொண்டாடப்படும் ஒரு மாதம் கார்த்திகை மாதம் இந்த மாதத்தில் தமிழகத்திலேயே சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் ஒன்பது கோபுரங்களையும் 6 பிரகாரங்களையும் 142 சன்னதிகளையும் 36 மடங்களையும் உள்ளடக்கிய திருக்கோவிலான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மிகப்பெரிய கோவில்களில் ஒன்று! மேலும் இக்கோவிலில் திருக்கார்த்திகை தீபம் கோலாகலமாக ஏற்றப்பட்டு 11 நாட்கள் கொண்டாடப்படும். 


அந்த வகையில் இந்த வருடத்திற்கான திருக்கார்த்திகை தீபத்தின் கொடியேற்றம் கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதி 64 அடி தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பத்து நாட்கள் இந்த விழா கொண்டாடப்பட்டு பதினோராவது நாள் அதிகாலையில் அண்ணாமலையார் கருவறை முன்பு 4 மணிக்கு பரணி தீபமும் அதனை தொடர்ந்து அன்று மாலையிலேயே 2668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்த 11 நாட்கள் அண்ணாமலையார் ஜோதிப்பிழம்பாய் தீபமாலை மீது பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என்பது நம்பிக்கையாக கூறப்பட்டு பக்தர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

அதோடு இந்த மகா தீபத்திற்காகவே மகா தீப கொப்பரையில் 4,500 கிலோ நெய்யும் ஆயிரம் மீட்டர் காடா துணி திரியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதிலும் சில பக்தர்கள் தங்களது காணிக்கைகளை மகா தீபத்திற்கு நெய் வழங்கி செலுத்தி வருவார்கள். இந்த மகா தீபத்தை காண்பதற்கு கோடான கோடி மக்கள் பல மாநிலங்களில் இருந்தும் வந்து தரிசித்து செல்வார்கள் இதற்காகவே பேருந்து வசதிகள், ரயில் வசதிகள் என அனைத்தும் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். மேலும் ஜோதி வடிவமாக கடவுளைப் பார்ப்பதே ஒரு அற்புதமான காட்சி அதிலும் முதல் முதலாக சிவனை ஜோதி வடிவமாக இந்த உலகத்திற்கு காட்டியது திருவண்ணாமலை தீபம் இதனால் இந்த உலகம் அனைத்து இன்பங்களையும் பெறட்டும் என்று குறிப்புகள் ஞான நூலில் இடம் பெற்றுள்ளது. அதோடு இந்த மகா தீபத்தை காண்பவர்களுக்கு முக்தியும் மோட்சமும் சிவ சொரூப நிலையும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 

மேலும் இந்த கோவிலில் சிவகங்கை தீர்த்த மற்றும் பிரம்ம தீர்த்தம் என்ற இரண்டு பெரிய குளங்களும் உள்ளதாகவும் சோழர்கள் காலம் தொடங்கி நாயக்கர் காலம் வரை தொடர்ச்சியாக பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்டும் திருப்பணிகள் செய்யப்பட்ட கோவிலாகவும் கருதப்படுகிறது. இருப்பினும் திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்படும் மகா தீபம் குறித்த வரலாறு குறித்த முழு விவரங்கள் இல்லை! எனினும் தமிழகத்தை ஆண்ட அனைத்து மன்னர்களாலும் இந்த கோவிலின் மகா தீப விழா பிரம்மாண்டமாக நடைபெற்று உள்ளது என்ற தகவலை குறிக்கும் கல்வெட்டுகள் மட்டும் உள்ளதாக கூறப்படுகிறது. 

அதோடு அக்காலம் தொட்டு இக்காலம் வரை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர தீபா விழா என்பது மிகவும் பிரசித்தி பெற்றது, அக்னி ஸ்தலம் என்று கூறப்படுகின்ற அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீபம் ஏற்றுவது பல நன்மைகளை தரக்கூடியது. இந்த நிலையில் தீபம் ஏற்றி முடிந்த பிறகு அந்த தீபத்தில் சேகரிக்கப்பட்டிருக்கும் மைகள் எங்கு செல்கிறது என்ற தகவலை துறவி ஒருவர் கூறியுள்ளார். அதாவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஏற்றப்படும் தீபத்திலிருந்து கிடைக்கும் மயானது முதலில் வைகுண்ட ஏகாதசி அன்று திருப்பதியில் பெருமாளுக்கு சாத்தப்படுவதாக ஒரு துறவி இதுவரை வெளி வராத தகவலை கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. திருவண்ணாமலை ஈசனின் ஜோதி மை திருமலையில் இருக்கும் பெருமாளுக்கு செல்வது பற்றிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகிறது.