பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லியில் அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டாவை சந்தித்துவிட்டு சென்னை திரும்பினார், அப்போது பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணாமலை மேகத்தாது அணை தொடங்கி டாஸ்மார்க் வெள்ளை அறிக்கை என பல்வேறு வழிகளில் முதல்வரை விமர்சனம் செய்தாலும் அண்ணாமலை இறுதியாக சிட்டிங் IAS அதிகாரிகள் முதல் பல்வேறு அதிகாரிகள் அறிக்கை தயாரிக்க உதவி இருப்பதாகவும் டாஸ்மார்க் மறைமுக விற்பனை தொடங்கி ஏன் குறிப்பிட்ட சில கம்பெனி பீர் மட்டும் வாங்க படுகிறது என்ற அனைத்தையும் குறிப்பிட்டு இருக்கிறோம் என தெரிவித்து இருப்பதுதான் தற்போது முதல்வரின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது.
சிட்டிங் IAS அதிகாரிகள் அண்ணாமலையுடன் தொடர்பில் இருக்கிறார்களா என்ற கேள்வி தான் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல அமைச்சர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறதாம்.. அரசு அதிகாரிகள் என்ன என்ன தகவலை பகிர்ந்து இருப்பார்கள் யார் அந்த IAS அதிகாரிகள் எதனால் அவர்கள் இது போன்ற முடிவை எடுத்தார்கள் என்ற பல விவாதங்கள் தற்போது ஆளும் கட்சி வட்டாரத்தில் எழுந்து இருக்கிறதாம்.
ஒரு அரசு முறையாக நடக்கவும் அரசிற்கு சிக்கல் வராமல் இருக்கவும் அரசு அதிகாரிகளின் பங்கு மிகவும் முக்கியம் அதிலும் IAS அதிகாரிகளின் செயல் என்பது ஆட்சியை முறையாக நடத்த மிக பெரிய பங்கு கொண்டது அப்படி இருக்கையில் அண்ணாமலையுடன் கை கோர்த்த IAS அதிகாரிகள் யார்? ஏன் பத்திரிகையாளர் சந்திப்பில் சூசாகமாக அண்ணாமலை சொல்லவேண்டும் இதன் பின்னணி என்ன என தெரியாமல் ஆளும் கட்சியான திமுக விழி பிதுங்கி நிற்கிறதாம்.
ஏற்கனவே அண்ணாமலை வெளியிட்ட DMK FILES 1 முதல்வர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திமுக அமைச்சர்களின் தூக்கத்தை கெடுத்த நிலையில் நாளை வெளியிட இருக்கும் வெள்ளை அறிக்கை என்ன மாற்றத்தை உண்டாக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.