மக்கள் மத்தியில் சகஜ பேச்சுக்கு பெயர் போன தமிழக அமைச்சரும் திமுகவின் பொது செயலாளராக உள்ள துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தற்போது திமுகவின் 17 வது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பாக நின்று வெற்றி பெற்றார். முன்னதாக 2012 முதல் 2013 ஆம் நிதியாண்டில் தாக்கல் செய்வதற்கான வருமான வரியை அவர் தாமதமாக செலுத்தியதாகவும் வருமானவரித்துறை இடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகே வரியை காலதாமதமாக அவர் கட்டியதாக வருமானவரித்துறை சார்பாக வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இருப்பினும் கதிர் ஆனந்த் தரப்பில் இந்த வழக்கை ரத்து செய்ய கோரி 2017 ஆம் ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தது தாமதம் மற்றும் வரி செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்திற்காக வருமானவரித்துறை அபராதம் விதிக்கலாம் தவிர வழக்கு தொடர முடியாது என்று குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தாக்கல் செய்த மனுவிற்கு எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு ஆனந்த் வெங்கடேஷ் நீதிபதி அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது விசாரணையிலும் கதிர் ஆனந்த் தரப்பில் வருமான வரி மற்றும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது தாமதம் ஏற்பட்டதற்கு வருமானவரித்துறை அபராதம் விதிக்கவே அதிகாரம் உள்ளது ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானவரித்துறை வழக்கு தொடர்ந்து உள்ளது அதனால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.
மேலும் வருமானவரித்துறை தரப்பில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று தங்களது தரப்பில் நோட்டீஸ் அனுப்பும் வரை வருமான வரியும் செலுத்தப்படவில்லை இதனால் இது பற்றி வழக்குப்பதிவதற்கு வருமானவரித்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிக்கப்பட்டது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வருமான வரி துறை தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யக் கோர முடியாது என்று கூறி கதிர் ஆனந்தின் மனுவை தள்ளுபடி செய்தார்.
வருமானவரித் துறையின் வழக்கை ரத்து செய்ய கோரி கொடுக்கப்பட்ட மனுவும் தள்ளுபடி ஆனதால் தற்போது எம்.பி கதிர் ஆனந்தின் நிலைமையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை இந்த சிக்கலில் இருந்து மீட்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜநாத் சிங்கை அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமான இருவர் நேரில் சென்று சந்தித்ததாக கூறப்படுகிறது. அதாவது தன் மகன் மீது உள்ள வருமானவரி துறை மற்றும் அமலாக்க துறையின் வழக்குகளை முடித்து தரும்படி, அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமான கரிகாலனை அனுப்பி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தூது அனுப்பியுள்ளார் துரைமுருகன் என்று மூத்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தூதில் எந்த ஒரு பலனும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றும், இதற்கு டெல்லி தலைமை மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுவெளியில் திமுக அமைச்சர்கள் பாஜகவை வீழ்த்துவோம் அவர்களுக்கு எதிராக கொடி பிடிப்போம் அவர்களிடம் எந்த உதவியும் கேட்க மாட்டோம் வழக்கு பதிய வேண்டும் என்றால் பதிந்து கொள்ளுங்கள் என்று முழக்கமிட்டு வந்தாலும் ரெய்டு போன்ற விவகாரங்களில் இருந்து தன்னை காப்பாற்றுவதற்காக தற்போது திமுகவின் முக்கிய அமைச்சராக உள்ளவர்களே மறைமுகமாக டெல்லிக்கு தூது சென்றது மற்றும் கோரிக்கை விடுத்த தகவல் வெளியாகி அறிவாலய வட்டாரத்தை பெரும் அதிர்ச்சியில் தள்ளி உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.