“தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி நடைபயணம் மேற்கொள்ள இருப்பதனால் ஆளும் திராவிட முன்னேற்ற கழகம் பதற்றத்தில் உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன”.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு அண்ணாமலை தலைமை ஏற்றத்திலிருந்து பல்வேறு மாற்றங்களை செய்துவருகிறார். அந்தவகையில் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்து கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் உறுப்பினர்களை அவர் களையெடுத்து வந்தார். இதனால் பாஜகவில் இருந்து பல்வேறு உறுப்பினர்கள் கட்சியைவிட்டு வெளியேறினார்கள்.
அதனை தொடர்ந்து தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்த வேண்டும் எனவும், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும், இனி வரும் சட்டப் பேரவை தேர்தலிலும் திராவிட கட்சிகளுடன் சேர்ந்து பாஜக கூட்டணி வைக்ககூடாது. அப்படி வைத்தால் நான் என்னுடைய தலைவர் பொறுப்பில் இருந்து விலகி, கட்சியின் சாதாரன தொண்டனாக பயணிப்பேன் என அவருடைய நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.
மேலும், திமுகவின் ஊழல் பட்டியலை பொதுமக்களுக்கு தெரிவிக்க போவதாகவும் அவ்வப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தும் வந்தார். இதையடுத்து, நேற்று திமுகவின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 10 நபர்களின் சொத்து பட்டியலை பொதுவெளியில் வெளியிட்டார்.
‘இதில் அவர்களுடைய சொத்துகளின் மதிப்பு சுமார் 1.31 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடைய இரண்டாம் பாகம் விரைவில் வெளியிடுவேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த திமுகவினர் அடுத்து அவர் என்ன செய்யப்போகிறார் என்று தெரியாமல் பயத்திலும், பதற்றத்திலும் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன’.
அதேபோல் “பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அந்த நடைபயணத்தில் தமிழ் மொழியின் சிறப்புக்களை பற்றியும், திமுக போன்ற ஊழல் ஆட்சியை குறித்தும் பொதுமக்களிடம் தெரிவிப்பதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்”.
மேலும் “திமுகவின் ஊழல் பட்டியலோடு சேர்த்து அதிமுகவின் ஊழல் பட்டியலையும் பொதுவெளியில் விரைவில் வெளியிடுவேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளதால், தமிழகத்தில் திராவிட கட்சிகள் பதற்றத்தில் உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன”.