‘மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விமர்சித்து பேசியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் நாராயாணன் திருப்பதி’.தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியில் அதிகளவு ஊழல் நடைபெற்றுள்ளதையும், திமுகவினர் சேர்த்து வைத்துள்ள சொத்து பட்டியலையும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டிருந்தார். அதில் திமுகவின் முக்கிய அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, அன்பில் மகேஷ் போன்ற 10 நபர்களின் சொத்து மதிப்பு சுமார்
1.34 கோடி லட்சமாக இருந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கும், அதனுடைய கூட்டணி கட்சிகளுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் திமுக கூட்டணி கட்சியின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக கட்சியின் தலைவர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:
“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தினமும் புதிய அதிர்வலைகளை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறார். இதற்கான ஆதாரங்களை அவர் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். இல்லை என்றால் திமுக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும். மேலும் அண்ணாமலையின் பேச்சுக்கு எந்த அர்த்தமும் கிடையாது என்றும் அதில் தெரிவித்திருந்தார்”. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ‘தமிழகத்தில் ஊழல் கரைபடிந்த திராவிட முன்னேற்ற கழகத்தோடும், 2 ஜி ஊழலில் சிக்கி, குடும்ப அரசியலை நடத்தி, அண்ணாவின் இலக்கை நாசமாக்கி, ஈழ தமிழர்களை காவு கொடுத்து தமிழக மக்களின் உயிர்களை படுகொலை செய்த திமுகவினருடன் கூட்டணி வைத்தும், பார்வதி அம்மாவை தமிழகத்தில் கால் வைக்க விடாமல் முகப்பெரிய துரோகத்தை செய்த திமுக தலைமையோடு எந்த தமிழுணர்வு உள்ளவன் கூட்டணி வைக்க முடியும்??? என்று அப்போதே கேள்வி எழுப்பிருந்தார்’.
மேலும், “திமுகவிற்கு தமிழ் உணர்வு செத்து போச்சா??? என்ற அப்போழுதே கேள்வி எழுப்பிய மதிமுக தலைவர் வைகோ தான் தற்போழுது திமுகவுடனே கூட்டணி வைத்திருக்கிறார். உங்களை போன்றவர்கள் அண்ணாமலை பற்றி பேசுவது வெட்க்ககேடான ஒன்றாகவும், நகைச்சுவையாகவும் இருக்கிறது என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விமர்சித்து பேசியுள்ளார்”.