24 special

சத்தம் இல்லாமல் எடப்பாடிக்கு அண்ணாமலை கொடுத்த ஷாக்... 10,000 வோல்ட் அடியால் தவித்த புரட்சி தமிழர்...

annamalai , edapadi palanisami
annamalai , edapadi palanisami

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61 வது குருபூஜை ராமநாதபுரம், மதுரை போன்ற மாவட்டங்களில் கோலாகலமாக நடந்தது. இந்த விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாரத்தில் உள்ள பசும்பொன் பகுதியில் மிகவும் சிறப்பாகவும் அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவராலும் வணங்கப்பட்டு நடைபெற்றது. இந்த குரு பூஜைகாகவே அக்டோபர் 28ஆம் தேதியில் இருந்து முக்குலத்தோர் சமுதாய மக்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து, பால்குடம், முளைப்பாரி இன்னும் சில நேத்தி கடன்களையும் நிறைவேற்றுவதற்காக பசும்பொன்னிற்கு வந்து முத்துராமலிங்க தேவருக்கு இவற்றை செலுத்தி வழிபட்டு சென்றனர். 


இந்த நிலையில் தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமாக உள்ள எடப்பாடி பழனிசாமி தேவர் குரு பூஜையில் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தும் பொழுது அவருக்கு எதிரான கோஷங்களே எழுப்பப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் தொண்டர்கள் சூழ்ந்து நின்று அவருக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினாலும் எடப்பாடி ஒழிக இபிஎஸ் ஒழிக என்ற கோஷங்கள் ஓங்கி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கோஷங்கள் அனைத்தையும் கண்டுகொள்ளாதபடி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை வணங்கி விட்டு சென்ற எடப்பாடி பழனிசாமியின் கார்  அபிராமத்தில் மறைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இவற்றிற்கு எடப்பாடி பழனிசாமி செய்த செயல்கள் தான் காரணம் என்றும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தன்னை நம்பியிருப்பவர்களை ஏமாற்றி வருகிறார் அதனால் ஏற்பட்ட கோபமே முக்குலத்தோர் விழாவில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது என்று மூத்த அரசியல் விமர்சகர்களாலும் விமர்சனம் செய்யப்படுகிறது. 

இந்த செய்தி அதிமுக தரப்பிற்கு பெரும் அதிர்ச்சி அளித்ததோடு தென் மாவட்டங்களில் நாம் பின்தங்கி விட்டோம் எப்படியாவது முக்குலத்தோர் சமுதாயத்தின் அரசியல் பிரமுகர்களை தன்பக்கம் இணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டு ஒரு சில அரசியல் தலைவர்களிடம் பேசியுள்ளது. அதிலும் குறிப்பாக முக்குலத்தோர் சமுதாயம் பாஜக பக்கம் திரும்புவதை முன்னிட்டு முக்குலத்தோர் சமுதாயத்தில் இருக்கக்கூடிய பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சிவாவை குறிவைத்து இழுப்பதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு முயற்சி செய்துள்ளது. இப்படி திருச்சி சிவாவை தன் பக்கம் இழுப்பதால் தென் மாவட்டங்களில் இருக்கும் முக்குலத்தோர் சமுதாயத்தினரின் வாக்குகள் மற்றும் அண்ணாமலையையும் ஒரேடியாக டார்கெட் செய்யலாமென பல்வேறு அரசியல் கணக்குகளை போட்டு எடப்பாடி பழனிசாமி தரப்பு அரசியல் காய்களை நகர்த்தியது. 

அதன் விளைவாக வருகின்ற நவம்பர் 5ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி திருச்சி சிவாவை சந்தித்து கட்சியில் இணைக்க பெற திட்டமிட்டு இருந்தார்,  ஆனால் அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி சிவாவை சந்தித்து அவரிடம் எடுக்கப்பட்ட பதவியை மறுபடியும் அவருக்கு வழங்கி திருச்சி சிவாவை தன் பக்கம் தக்க வைத்துக் கொண்டார். மீண்டும் பொறுப்பை பெற்றது குறித்து திருச்சி சூரிய சிவாவும் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கடமை, கண்ணியம் என்ற வார்த்தைகளை முற்றிலுமாக மறந்து போன திராவிட அரசியலுக்கு எதிராக, கட்டுப்பாட்டு என்ற சொல்லின் பொருள் விளங்க அரசியல் போர் தொடுத்து, தொண்டர்கள்

அனைவரையும் அரவணைப்பது போல மீண்டும் என்னை அரவணைத்து ஃபீனிக்ஸ் பறவையாக மாற்றிய எங்கள் அண்ணன் அண்ணாமலை  அவர்களுக்கும், அண்ணன் கேசவ் விநாயகம் அவர்களுக்கும் எனக்கு தோள் கொடுத்து நின்ற மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியின் கணக்கை அண்ணாமலை அசால்டாக முறியடித்து விட்டார் என சில பாஜக வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கின்றனர்.