24 special

தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கிறதா? அல்லது சமூக விரோதிகளுக்கான ஆட்சி நடக்கிறதா? அண்ணாமலை!

mk stalin, annamalai
mk stalin, annamalai

தமிழகத்தில் அரசு அலுவலர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இப்போது அதன் தொடர்ச்சியாக விஏஓ மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பாஜக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில் பத்து கிராமத்தில் விஏஓ -ஆக இருந்தவர் லூர்து பிரான்சிஸ் அந்த பகுதியில் மணல் கொள்ளையை தீவிரமாக தடுத்து வந்தார். இதனால் இவரது அலுவலகத்தில் இருவர் புகுந்து லூர்து பிரான்சிஸ்ஸை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


எனினும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் தமிழ்நாட்டில் ஆட்சி ஒழுங்குமுறையை காட்டியது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, தற்போது சிவகங்கை மாவட்டம் காளையர் கோவில் அடுத்த புதுப்பட்டி பகுதியில் கிராவல் மண் கடத்துவதாக எனவராம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் சேகர். அந்த பகுதியில் சிலர் உரிமம் வாங்காமல் மணல் கடத்துவதாக தகவல் விஏஓ சேகருக்கு வந்துள்ளது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று தட்டி கேட்டபொழுது அவரை சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். 

அந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த விஏஓ சேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார்  சேகரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் திமுக நிர்வாகிகள் தான் இச்சம்பவத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. இதேபோல் வேலூரில் உள்ள பொன்னை அணைகட்டு ஆற்றில் உரிமம் பெறாமல் மணல் அள்ளிக்கொண்டு வந்தனர். இதனை முன்னாள் ராணுவ வீரர் உமாபதி இதனை கண்டு அந்த சம்பவத்தை தனது போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதனை பார்த்தவர்கள் மணல் கொள்ளையர்கள் உமாபதியை, விரட்டி விரட்டி வெட்டியுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த, முன்னால் இராணுவ வீரர் உமாபதி, காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அதன் பின்னர், படுகாயமடைந்திருந்த உமாபதியை மீட்டு, மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தது, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில், மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலர் மீது, மணல் கொள்ளையர்கள் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர்.அதே போல, வேலூர், பொன்னையாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை வீடியோ எடுத்த, முன்னாள் ராணுவ வீரர் உமாபதி அவர்களை, சமூக விரோதிகள் கொலை செய்யும் நோக்கில் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

தங்கள் கடமையைச் செய்யும் அரசு அதிகாரிகள் மீதும் சமூக அக்கறைக் கொண்ட பொதுமக்களின் மீதும், தமிழகம் முழுவதும் சமூக விரோதிகள் தாக்குதல் நடத்துவது  தொடர்கிறது. அதிகாரிகளை அவர்களது அலுவலகத்திலேயே கொலை செய்வதும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லாமல் இருப்பதும் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதனைத் தடுக்கக் கையாலாகாமல் இருக்கிறது ஊழல் திமுக அரசு. அரசு அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் உயிர் பாதுகாப்பு இல்லையென்றால், தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கிறதா அல்லது சமூக விரோதிகளுக்கான ஆட்சி நடக்கிறதா என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.