அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைப்பயணத்தில் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தென்காசியில் புகார் எழுந்தது. அந்த வழக்கின் விசாரணை இன்று வந்தது அந்த வழக்கு மீது நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.சென்னை பனையூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு பாஜக கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. இந்தக் கொடிகம்பம் அனுமதி இன்றி வைக்கப்பட்டதாக புகார் எழுந்து. அதைத்தொடர்ந்து போலீசார் ஜேசிபி வாகனம் சேதப்படுத்தப்பட்ட நிலையில், பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக கானாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமர் பிரசாத் ரெட்டி உள்பட 6 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி மீது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவின் போது விளம்பரத்தில் இடம்பெற்ற மு.க.ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடி படத்தை ஒட்டியது தொடர்பாக காவல்துறை மேலும் ஒரு புகார் தொடுக்கப்பட்டது. இதனால் அவரை மீது குண்டாஸ் சட்டம் பாயும் என்று அவரது மனைவி தன் கணவர் மீது பொய் வழக்கு போடப்படுவதால் சென்னை உயர் நீதி மன்றத்தில் புகார் மனு அளித்தனர்.
இந்நிலையில் தென்காசியில் பாதயாத்திரையின் போது போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்த புகார் மீதான விசாரணை இன்று அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனால் புழல் சிறையில் இருந்து நேற்று ஆர் பிரசாத் ரெட்டியை காவல் வாகனத்தில் அழைத்து செல்லாமல், கிரிமினல் போன்று அரசு பேருந்தில் அழைத்து வந்தனர்.முறையான சாப்பாடு இன்றியும் உடை மாற்ற கூட அனுமதி வழங்காமல் அமரை தொடர்ச்சியாக காவல்துறை பழி வாங்கிய நிலையில் தற்போது அவரை வீதி வீதியாக அரசு பேருந்தில் பாதுகாப்பு இன்றி அழைத்து வந்து மேலும் ஒரு பழி வாங்கும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டு இருப்பது தற்போது பாஜகவினரை கொதிப்படைய செய்து இருக்கிறது.
நேற்று சென்னையில் இருந்து அழைத்துவந்தனர். இன்று அம்பாசமுத்திரம் குற்றவியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அமர் பிரசாத் ரெட்டிக்கு நீதிபதி பல்கலைச்செல்வன் அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் போலீசாரை கொண்டு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அமர்ப்பிரசாத் ரெட்டிக்கு ஆதரவாக பாஜகவினர் சூழ்ந்து முழக்கம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு சம்பவம் ஏற்பட்டது. முன்னதாக முதலவர் ஸ்டாலின் படத்தை அவமதித்த வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.