24 special

அண்ணாமலை வருகிறார் தருமபுரம் ஆதின கர்த்தர் அறிவிப்பு ! நாளை சிறப்பான சம்பவம் ?

Annamalai and dhamapuram aadhinam
Annamalai and dhamapuram aadhinam

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் உள்ள பழமைவாய்ந்த ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயிலில்ஆதீன குருமுதல்வர் ஸ்ரீ குருஞானசம்பந்தர் குருபூஜை பெருவிழாமே 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.


விழாவின் முக்கியநிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.தேரோட்டத்துக்குப் பின்னர், தருமபுரம் ஆதீனகர்த்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தருமபுரம் ஆதீன குருமுதல்வர் குருபூஜை விழாவை முன்னிட்டு21-ம் தேதி (இன்று) குருஞானசம்பந்தரின் குருவான கயிலை ஞானப்பிரகாசரின் குருபூஜை திருநாள் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 27 ஆயிரம்மரக்கன்றுகள் நடப்படும்.

 இதைத் தொடர்ந்து, மே 22-ம் தேதி (நாளை) இரவு பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும்.இதில், பல்வேறு ஆதீனகர்த்தர்கள், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சில அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்வதாக கூறியுள்ளனர் எனத் தெரிவித்தார்.  தமிழக அரசு முதலில் தர்மபுரம் ஆதினம் நிகழ்விற்கு தடை விதித்த சூழலில் இந்து அமைப்புகள் பெரும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பை பதிவு செய்தார் நானே நேரடியாக சென்று தர்மபுரம் ஆதினம் பல்லக்கை சுமப்பேன் எனவும் தெரிவித்து இருந்தார் இதையடுத்து பின்வாங்கிய தமிழக அரசு தனது முடிவை மாற்றி கொண்டது பட்டினம் பிரவேஷத்திற்கு அனுமதி கொடுத்தது இருப்பினும் திக உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

நாளை திக உள்ளிட்ட அமைப்புகள் கருப்பு கொடி காட்டலாம் என்று கூறப்படுவதால் நாளை சிறப்பான சம்பவங்கள் அரங்கேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.