India

காலியான அடுத்த விக்கெட்..! கலங்கிப்போன காங்கிரஸ்..!

rahulganthi
rahulganthi


ராஜஸ்தான் : காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கட்சியில் மறுசீரமைப்பு செய்யப்படும் என கூறிய நாளில் இருந்தே பல விக்கெட்டுகள் காங்கிரசில் வீழ்ந்தவண்ணம் உள்ளன. குஜராத்தில் ஹர்திக் படேல் பஞ்சாப்பில் சுனில் ஜாகர் மற்றும் உத்திரகாண்ட், மேற்குவங்கம், திரிபுரா அஸ்ஸாம் என அடுத்தடுத்த ராஜினாமாக்கள் காங்கிரஸ் தலைமையை கலகத்துக்குள்ளாகியிருக்கிறது.


இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு மிக நெருக்கமானவரான கணேஷ் கோக்ரா தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். இது ராஜஸ்தான் காங்கிரஸாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாநில இளைஞர் அணி தலைவராகவும் துங்கர்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள கோக்ரா ஆளும்கட்சியால் புறக்கணிக்கப்படுவதாக கூறி பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

தந்தது ராஜினாமா கடிதத்தை முதல்வர்,சோனியா காந்தி மற்றும் சபாநாயகருக்கு அனுப்பிவைத்தார். அந்த ராஜினாமா கடிதத்தில் " மக்கள் பிரச்சினையை தலைமைக்கு எடுத்து கூறினால் அதை செவிகொடுத்து கேட்கமறுக்கிறார்கள். ஆளும் கட்சியாலேயே புறக்கணிக்கப்படுவது மன வருத்தத்தை அளிக்கிறது. ஒரு சட்டமன்ற உறுப்பினரே புறக்கணிக்கப்படுவது இந்த நிர்வாகத்தில்தான்" என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதில் வியத்தகு விஷயம் என்னவெனில் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் ராஜஸ்தான் பேரணியில் கலந்துகொண்டபோது அவரை தனது தொகுதியான துங்கர்பூருக்கு அழைத்து சென்று முதல்வர் அசோக் கெலாட் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு பெரிய விருந்து ஒன்றை கோக்ரா அளித்திருந்தார். 

அந்த நிகழ்ச்சியை அடுத்து நடத்தப்பட்ட பேரணியில் கணேஷ் கோக்ராவும் காங்கிரஸ் தலைமையை உச்சிகுளிர பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. கோக்ராவின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக சபாநாயகரோ அல்லது காங்கிரஸ் தலைமையோ இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. ஆனால் உட்கட்சிப்பூசல் நிலவிவருவதால் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என கோக்ரா கருதுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்