
மத்தியில் இருக்கக்கூடிய பிரதமர் மோடியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக முதன் முதலாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியை தொடங்கினார். கூட்டணியில் தமிழ்நாட்டை சேர்ந்த திமுக மற்றும் மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல மாநில கட்சிகள் இணைந்தது. கூட்டணியில் தொடர்ந்து சச்சரவு நீடித்து வந்தது. குறிப்பாக பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என நினைத்த கூட்டணிகள் இப்போது தங்களை தாங்களே அழித்து கொள்ளும் நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது.
இந்தியா கூட்டணி தொடங்க முக்கிய காரணமாக இருந்த நிதிஷ்குமார் கடந்த மகாத்மா கூட்டணியில் இருந்து வெளியில் வந்து பாஜக கூட்டணியில் இணைந்து முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றார். இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி தலைமை தங்குகிறது. நிதிஷ்குமார் வெளியே போனதால் அந்த கூட்டணி மீது கடும் விமர்சனம் எழுந்தது. முதல் கோணம் முற்றிலும் கோணம் என அரசியல் விமர்சகர்களால் விமர்சனம் வைக்கப்பட்டது. கூட்டணி ஆரம்பித்த நாளில் இருந்தே அந்த கட்சியில் பிரதமர் வேட்பாளர் பிரச்சனை தொடர்ந்தது. ஒருபக்கம் நிதிஷ்குமார் வேட்பாளராகவும் மல்லிகார்ஜுன கார்க்கே ஒரு பக்கம் வேட்பாளர் என பேச்சுக்கள் எழுந்தபோது அந்த கூட்டணி கவிழ தொடங்கியது.
காங்கிரஸ் கட்சிக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் குறைவான தொகுதியே கொடுப்பதாக இருந்தது. மேற்கு வங்கத்தில் இரண்டு தொகுதி தருவதாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மம்தா பானர்ஜி கூறினார், அதேபோல் டெல்லியில் உள்ள ஆம் ஆதமி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குறைவான தொகுதி கொடுப்பதாக இருந்தது. இதனால் தேசிய கட்சியான காங்கிரஸ் சிக்கல் எழுந்தது தமிழகத்திலும் இதே பிரச்சனை தற்போது காங்கிரஸ் கட்சி சந்தித்து வருகிறது. நிதிஷ்குமார் விலகியதும் மம்தா பானர்ஜி தனித்து போட்டியிடுவதாக கூறி காங்கிரஸ் கட்சிக்கு அந்த இரண்டு தொகுதி கூட இல்லை என முடிவெடுத்தது கூட்டணிக்கு முதல் சறுகளாக பார்க்கப்பட்டது.
அரவிந்த் கெஜ்ரிவாழும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கொடுப்பதாக தெரிவித்தது, இதனால் காங்கிரஸ் அந்த மாநிலத்திலும் இரண்டாவது சறுகளை கண்டது. இருப்பினும் மோடியை எதிர்க்க இந்த கட்சிகள் செயல்படும் என கூறிவந்தது. ஒருபக்கம் ராகுல் காந்தி ஜோடா யாத்திரை மேற்கொண்டு வருகிறார் அங்கு அவருக்கு கூட்டணி கட்சிகளே முழுமையாக ஒத்துழைப்பு தரவில்லை என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி தனித்து போட்டியிடும் என பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்து முழுமையாக சறுக்கலை சந்தித்து வருகிறது.
ஏற்கனவே, மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சிக்கு பாராளுமன்றத்தில் 40 தொகுதிகள் கிடைப்பது சிக்கலாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்தியா கூட்டணியில் எப்போது திமுக என்கிற கட்சி காலடி எடுத்து வைத்ததோ அன்றே அந்த கூட்டணி முடிந்துவிட்டது. சனாதனம் பேசி ஐந்து மாநில தேர்தலில் ஓரம்கட்டியது காங்கிரஸ். மற்ற கட்சிகள் வெளியே போவதற்கு திமுகவே முதலில் வெளியேத்திருந்தால் அந்த கூட்டணி இன்று பெயர் சொல்லும் அளவிற்கு இருந்திருக்கும் என அரசியல் விமர்சர்களால் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு ஒற்றை இலக்கு கொண்ட தொகுதியே காங்கிரசுக்கு கொடுக்கக்கூடும் என தகவல் வெளியாகிவருகிறது.