
தற்போது உள்ள மக்களிடம் பாக்கெட்டில் பணம் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருக்கும் நபரிடம் பணபரிவர்த அப்ஸ்களான பேடிஎம் போன்றவைகளில் தங்களது வங்கி கணக்கை சேர்த்து அதன் மூலம் பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பலரும் எதாவது ஒரு வலைப்பக்கத்தில் சென்று தங்களது வங்கி கணக்குகளை பதிவிட்டு பணத்தை இழந்துவருகின்றனர். என்னதான் விழிப்புணர்வு கொடுத்தாலும் மக்கள் திருந்திகொள்வதாக தெரியவில்லை.
பேடிஎம் நிறுவனத்தின் மொபைலில் செயலில் உள்ள பணவர்த்தனை பக்கமான கேஒய்சியில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருவதாக. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவுக்கு தகவல் சென்றுள்ளது அதனை படி விசாரித்ததில் பேடிஎம் மூலம் நடந்தது உறுதிசெய்யப்பட்டு ஜனவரி31ம் தேதியுடன் அந்த செயலியில் உள்ள குறிப்பிட்ட பரிவர்த்தனை முடக்கம் செய்து உத்தரவிட்டது ரிசர்வ் பேங்க். இதனால் மக்கள் யாரும் வாலாட்டில் பணம் சேர்க்க வேண்டாம் என அறிவுறுத்தியது.
இந்த நிலையில் பேடிஎம்மில் உள்ள மூத்த நிர்வாகிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர் அவர்களிடமிருந்து முக்கிய ஆவணங்கள் பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகின. இந்நிலையில், நிதி நுண்ணறிவு பிரிவு (FIU) நடத்திய சோதனையில் பேடிஎம் வரும் பபுத்தகத்தின் முதல் பக்கம் தான் அடுத்தடுத்து சிக்கப்போகும் பேமெண்ட் வங்கிகளைப் பாருங்கள் எனப் புதிய குண்டை தூக்கிப்போட்டு உள்ளது. முறையாக கேஒய்சியி உறுதிப்படுத்தப்படாமல் சுமார் 50000 கணக்குகள் செயல்பாட்டில் இருப்பதாக நிதி நுண்ணறிவு பிரிவு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இந்த கணக்குகளில் சட்டவிரோத பணபரிவர்தனையில் மற்றும் பணமோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த 50000 கணக்கில் சுமார் 30,000 கணக்குகள் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியைத் தவிர வேறு பேமெண்ட் வங்கிகளில் உள்ளது தான் தற்போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம். இது தொடர்பான அணைத்து ஆதாரத்தையும் இந்தியன் ரிசர்வ் வங்கிகளுக்கு கொடுத்துள்ளதாம். இதனால் வரும் நாட்களில் ஆர்பிஐ தகவல் உறுதிப்படுத்திய பின் பல்வேறு பேமெண்ட்ஸ் வங்கிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கக்கூடும் என்பதில் மாற்றமில்லை. பேடிஎம் தொடர்ந்து ஆர்பிஐ மொத்த பரிவர்த்தனையும் ஒரு ஸ்கேனிங் வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பான விரிவான அறிக்கையை மார்ச் 31 ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்க FIU கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். நுண்ணறிவின் முக்கிய பணி வங்கி அல்லது நிதி நிறுவனம் புகாரளித்த தகவல்களைப் பகுப்பாய்வு செய்து, அமலாக்க இயக்குநரகம் மற்றும் ரிசர்வ் வங்கி போன்ற ஒழுங்குமுறை அதிகாரிகளுக்குப் பல்வேறு புலனாய்வு அமைப்புகளுக்கு அனுப்புவது தான் நிதி நுண்ணறிவு பிரிவு (FIU) முக்கியப் பணியாகும். இதில் மக்கள் அன்றாட பயன்படுத்தும் மொபைல் செயலி இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. டெக்னோலஜி எந்த அளவிற்கு வளர்கிறதோ அந்த அளவிற்கு பதிப்பு இருக்கிறது என சும்மாவா சொன்னாங்க என்பது குறிப்பிடத்தக்கது.