24 special

சவுக்கு "சங்கருக்கு" கிடைத்த மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி!

Savukku shankar
Savukku shankar

பிரபல யூடுப்பர் சவுக்கு சங்கர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறை தண்டனை பெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது, இந்த சூழலில் சவுக்கு சங்கர் நள்ளிரவில் மதுரை சிறையில் இருந்து கடலூருக்கு மாற்றப்பட்டார், சவுக்கு சங்கருக்கு என்ன நடந்தது?


ஏன் அவர் சிறை மாற்றப்பட்டார் என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில் என்ன நடந்தது என்று பேசப்படும் தகவல்களை பார்க்கலாம்.

சமூக வலைதளத்தில் ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்தும், நீதிபதிகள் குறித்தும் தொடர்ச்சியாக அவதூறாக பதிவிட்டது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது அவமதிப்பு வழக்கை மதுரை ஐகோர்ட்டு ஏற்கனவே பதிவு செய்திருந்தது. இந்த நடவடிக்கைக்கு பின்னரும், நீதிமன்ற விவகாரங்கள் தொடர்பாக யூடியூப் சேனலில் இந்த சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சவுக்கு சங்கர் மீது , கிரிமினல் அவமதிப்பு வழக்கும் மதுரை ஐகோர்ட்டு பதிவு செய்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் நீதித்துறையை அவதூறாக விமர்சித்த வழக்கில் அவமதிப்பு நடவடிக்கையாக சவுக்கு சங்கர்-க்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி மதுரை ஐகோர்ட்டு  அதிரடி உத்தரவிட்டது.

அதன்படி சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் அடைக்கபட்டார்.இந்நிலையில் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சவுக்கு சங்கர் மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். நிர்வாக காரணங்கள், அச்சுறுத்தலால் சவுக்கு சங்கர் மதுரை சிறையில் இருந்து மாற்றப்பட்டதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சவுக்கு சங்கர் மீதான பல்வேறு வழக்குகள் விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் அவரை மதுரையில் இருந்து விசாரணைக்கு சென்னை அழைத்து செல்வது பாதுகாப்பு காரணங்களுக்கு சிக்கலை உண்டாக்கும் என்பதால் சவுக்கு சங்கரை கடலூருக்கு மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது. 

தொடர்ச்சியாக சவுக்கு சங்கர் பல்வேறு நபர்கள் மீதும் உண்மைக்கு புறம்பான தகவல்களை சில யூடுப் சேனல்களில் பேசி இருப்பதாகவும் அதற்கான ஆதாரம் சவுக்கு சங்கரிடம் இல்லாமல் இருப்பதாகவும் விரைவில் சவுக்கு சங்கர் மீதான வழக்குகளிலும் அவருக்கு எதிராக தீர்ப்புகள் வரும் என்றும் கூறப்படுகிறது, இது ஒருபுறம் என்றால் ஆதாரம் இல்லாத தகவல்களை பேச அதனை பரப்ப உதவிய யூடுப் சேனல்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சவுக்கு சங்கரால் பாதிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தை நாட இருக்கிறார்களாம்.

இதற்கு இடையில் நேற்றைய தினம் தீர்ப்பு வெளிவருவதற்கு முன்பே தன்னை காவல்துறையினர் சிறை வைத்து இருப்பதாக சவுக்கு சங்கர் அவரது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்து இருப்பதும் சட்டத்தை மீறிய தவறான செயலாக பார்க்கப்படுகிறது, இதோடு ஏற்கனவே சவுக்கு சங்கரை ட்விட்டர் நிறுவனம் தவறான தகவலை பரப்பிய காரணமாக அவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்ட சூழலில் மீண்டும் போலியான அல்லது வேறு கணக்கை அவர் பயன்படுத்தியதும் தவறான குற்றம் என்பதால் தொடர்ச்சியாக தவறு மேல் தவறு செய்துவரும் சவுக்கு 6 மாத காலத்தை சிறையில் கழிக்க வேண்டிய சூழல் உண்டாகி இருக்கிறது.

ஏற்கனவே திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜாப்பர் சேட் - கனிமொழி ஆடியோவை வெளியிட்ட வழக்கில் சவுக்கு சங்கர் சிறை சென்றவர் என்பதால் அவருக்கு இந்த சிறை பயணம் புதிதாக இருக்காது என்று சவுக்கு சங்கர் அவரை சந்திக்க வரும் நபர்களிடம் தெரிவித்து வருகிறாராம்.

தன்னை ஒரு வேலை நீதிமன்றம் சிறைக்கு அனுப்பினால் தான் பேட்டி கொடுத்த யூடுப் சேனல்கள் தனக்கு உதவும் என்றும் சவுக்கு சங்கர் எதிர்பார்த்து இருந்த நிலையில் பல சேனல்கள் கம்பி நீட்டி விட்டனவாம்.