Cinema

வேண்டாம் சாமி "வம்பு" நடிகர் சிவகுமார் குடும்பம் எடுத்த புது முடிவு...!

Actor sivakumar family
Actor sivakumar family

தமிழக சினிமா துறையினர் ஆட்சி மாறினால் காட்சியும் மாறிவிடுவார்கள்  அந்த வகையில் ஆண்டு ஆண்டு பல்டி அடிப்பதை தொழிலாக கொண்டு இருந்தவர் நடிகர் சத்யராஜ்... திடீர் என மேடையில் தமிழ் தமிழ் என முழங்குவார், ஆனால் தமிழகத்தில் எந்த கட்சி ஆழ்கிறதோ அதே கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து விடுவார்.


தமிழ் மொழி அரசியல் பேசியவர் இறுதியில் பாகு பலி திரைப்படம் வெளியாகவேண்டும் என கன்னட அமைப்புகளிடம் வருத்தம் தெரிவித்து பல்டி அடித்தது பழைய வரலாறு அது ஒருபுறம் என்றால் அந்த பட்டியலில் புதிதாக இணைந்து இருக்கிறார் நடிகர் சிவகுமார்.

சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சிவகுமார் பேசிய பேச்சுதான் விவாதத்தை உண்டாக்கி இருக்கிறது, நடிகர் சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பில் 43-வது ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா சென்னையில் நடந்தது. நடிகர் சிவக்குமார், நடிகர் கார்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் பேசும்போது, சென்னையில் சாதாரண ஆங்கில ஆசிரியராக இருந்த சீனிவாஸ சாஸ்திரி, தனது ஆங்கிலப் புலமையால் ஆங்கிலேயர்களால் சில்வர் டங் என்ற பட்டத்தைப் பெற்றவர். இவர், வலங்கைமான் என்கிற இடத்தில் கோயிலில் மணி அடிக்கும் சாதாரண பிராமண குடும்பத்தில் பிறந்தவர்.

பிராமணர்களைப் பற்றி நாம் ஏதேதோ செல்கிறோம். ஆனால், அடுத்த வேலை சாப்பாட்டுக்குக் கூட வழியின்றி இன்னமும் கோயிலில் பூஜை செய்து  வாழ்க்கை நடத்தும் பிராமணர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.நானும் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்தவன்தான்.

நான் 6, 7, 8-ம் வகுப்பு படிக்கும்போது எனக்கு ஆசிரியர்களாக இருந்தவர்கள் சுந்தராம்பாள், சேதுராமய்யர், சந்திரசேகர் போன்றோர் பிராமணர்கள்தான். அவர்கள் டியூசனுக்கு 5 பைசாகூட வாங்க மாட்டார்கள். சோதா பயலுகளா மறுபடியும் மாடு மேய்க்கப் போயிடாதீங்கடா, ஒழுங்கா படிங்கடா என்று சொல்லி எங்களை படிக்க வைத்தார்கள்.

அந்த வாத்தியார்கள் போட்ட பிச்சையால்தான் நான் படித்து இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறேன். வாழ்க்கையில் கல்வியும், ஒழுக்கமும் இருந்தால் மனிதன் எந்த உச்ச நிலையையும் அடையலாம்” என்றார்.

இதே சிவகுமார் தான் சில மாதங்களுக்கு முன்னர் கோவில் கட்டும் கொத்தனாரால் நாளை கோவிலுக்கு போக முடியாது கடவுளை தொட முடியாது என பேசி சர்ச்சையை உண்டாக்கினார், திருப்பது ஏழுமலையானை தரிசனம் செய்பவர்கள் குறித்தும் சிவகுமார் பேசிய வீடியோ சர்ச்சையானது, தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தது.

சிவகுமாரின் பேச்சை ஒரு சமூகத்திற்கு எதிரான கருத்தாக திராவிட கழகம் போன்ற அமைப்புகள் சித்தரித்தன மேலும் தொடர்ச்சியாக நடிகர்கள் சிவகுமார் மகன்களான சூர்யா, கார்த்தி போன்றோரும் அடுத்தடுத்து அரசியலில் சிக்கினர், இந்த சூழலில்தான் ஏன் வம்பாக போனது என எந்த அரசியலிலும் சிக்காமல் இருக்க சிவக்குமார் குடும்பம் முடிவு செய்யதுள்ளதாம்.

இந்தி பாலிவுட் நடிகர்கள் கடந்த கால தங்கள் படங்களில் இந்து மதத்திற்கு எதிராக காட்சிகள் வைத்துள்ள காரணத்தால் தற்போது மிக பெரிய எதிர்ப்பை சந்தித்து வருகின்றனர், எந்த சர்ச்சையிலும் சிக்காத நடிகர்கள் படங்கள் மட்டுமே இந்தி திரையுலகில் ஓடுகின்றன, நாளை இதே நிலைமை தமிழ் திரையுலகிலும் அரங்கேறலாம் என்பதால் எந்த சர்ச்சையிலும் மீண்டும் சிக்க வேண்டாம் என சிவகுமார் குடும்பம் முடிவு எடுத்து இருக்கிறதாம் அதன் அடிப்படையில்தான் சிவகுமார் பல்டி அடித்து இருப்பதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் திரை பயணத்தை கவனித்து சமூக சேவையை மட்டும் செய்யும் முடிவிற்கு சிவகுமார் குடும்பம் வந்துள்ளதாம்.